Home

Tuesday 24 April 2018

புக்கில் அமைந்தின்று கொல்லோ?



இரண்டு மூன்று ஆண்டுகளாக எனக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை சிறுகச்சிறுகக் குறைந்து இப்போது ஒன்று அல்லது இரண்டு என தேங்கிவிட்டது. அவை கூட நண்பர்களிடமிருந்து வந்தவையாக அல்லாமல் ஏதோ நிறுவனங்களிடமிருந்து வந்த நினைவூட்டு மடல்களாகவே பல சமயங்களில் இருக்கும். சில நாட்களில் ஒன்று கூட வந்திருக்காது. மின்சாரமில்லாத நேரத்தில் அறையைத் திறந்துபார்த்ததுபோல இருக்கும். புதிய மடல்கள் எதுவுமற்ற அஞ்சல் பெட்டியின் வெறுமை முகத்தில் அறையும். அக்கணம் கவியும் தனிமையுணர்விலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல.

கதவு திறந்தே இருக்கிறது - பசவண்ணரும் புதிய சமூகக்கனவும்


கோவில் வழிபாட்டையும் வைதிகச்சடங்கு முறைகளையும் சாராத ஒரு புதுவிதமான வழிபாட்டுமுறையையும் பக்தி முறையையும் இந்த உலகுக்களித்தவர் பசவண்ணர். ஒவ்வொரு பக்தனும் தன் உடலையே கோவிலாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது அவர் வழி. கொல்லாமை, பொய்சொல்லாமை, தீய செயல்களில் ஈடுபடாமை போன்ற பழக்கவழக்கங்களால் தம்மைத்தாமே தூய்மை செய்துகொள்ளும் முறைகளை இடைவிடாமல் பயிற்சி செய்யவேண்டும். தன்னை சிவபக்தன் என இந்த உலகுக்கு உணர்த்தும் விதமாக மிகச்சிறிய லிங்கமொன்றை எப்போதும் அணிந்திருக்கவேண்டும். இடைவிடாமல் இப்பயிற்சிகளைப் பின்பற்றும்போது, சாதி வேறுபாடுகளையும் பால் வேறுபாடுகளையும் கடந்து ஒவ்வொரு பக்தனும் சிவனுக்கு அருகில் இருக்கும் உணர்வைப் பெறமுடியும். அவன் உள்ளமும் உடலும் சிவன் உறையும் இடமாக மாற்றமடையும். இத்தகு கொள்கைகளின் அடிப்படையில் புதியதொரு சமுதாயத்தை உருவாக்க முயற்சி செய்தவர் பசவண்ணர்.

Sunday 15 April 2018

வேங்கை வேட்டை - கட்டுரை


1857 ஆம் ஆண்டு, இந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு கட்டம்.  அந்த ஆண்டில்தான் ஆங்கிலேயரின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்தும் ராணுவத்துறையில் ஆங்கில அரசாங்கம் அறிமுகப்படுத்திய நடைமுறைகளை வெறுத்தும் இந்தியச் சிப்பாய்களிடையே ஒரு பேரெழுச்சி உருவானது. அந்த எழுச்சி ஆட்சியில் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டியது. கிளர்ச்சியைத் தொடர்ந்து தில்லியைக் கைப்பற்றி, தன்னை அரசராக அறிவித்துக்கொண்டவர் நானா சாகிப்

ஞானத்தின் கண்கள் - கட்டுரை




கடந்த மாதத்தில் நான்கு மரணங்களை அடுத்தடுத்துப் பார்க்க நேர்ந்தது. ஒருவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். இருபதாண்டுகளாகத் தினமும் பார்த்து உரையாடியவர். படுக்கச் சென்றவரை நள்ளிரவு நேரத்தில் தாக்கிய நெஞ்சுவலி உயிரைப் பறித்துவிட்டது. இரண்டாவதாக நிகழ்ந்தது எங்கள் உறவுக்காரர் ஒருவரின் மனைவியுடைய மரணம். இடைவிடாத காய்ச்சல் என்று மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டவரைப் பிணமாகத்தான் கொண்டு வந்தார்கள். மூன்றாவதாகப் பார்த்த நிகழ்ச்சி என் அலுவலக நண்பரின் தந்தையாருடைய மரணம். நான்காவதாக எங்கள் தெருவில் வாழ்ந்த ஒரு பிரமுகரின் மரணம். அதன் விளைவாக அதிர்ச்சியும் வெறுமையும் என்னை இடையிடாமல் அலைக்கழித்தன. 

Thursday 5 April 2018

வரலாறாக வாழ்ந்த மாமனிதர் - முன்னுரை





மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் பிறந்திருந்தால் மதுரைவீரன், தேசிங்குராஜா, கட்டபொம்மன் போல மக்களின் வாய்வழிப்பாடல்களிலும் கதைகளிலும் இடம்பெற்றிருக்கக்கூடிய மாபெரும் ஆளுமையாக .வே.சு.ஐயர் விளங்கியிருக்கக்கூடும். அதற்கு முற்றிலும் தகுதியானவராகவே அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. எங்கள் பள்ளிக்கூட நாட்களில் தேசவிடுதலைப் போராட்டவீரர்களைப்பற்றி உணர்ச்சியும் நெகிழ்ச்சியுமான குரலில் எங்களுக்கு எடுத்துச் சொன்ன கதைநேர ஆசிரியர்தான் முதன்முதலாக எங்களுக்கு .வே.சு.ஐயரைப்பற்றிச் சொன்னார். அவர் சொன்ன பல தகவல்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையை சிறையில் அடைத்து செக்கிழுக்கவைத்த ஆங்கிலேய கலெக்டர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கிப்பயிற்சி கொடுத்தவர் .வே.சு.ஐயர் என்கிற தகவல் எங்கள் இளம்நெஞ்சில் பசுமரத்தாணிபோலப் பதிந்துவிட்டது. அப்போதெல்லாம் அவர் பெயரைக்கூட எங்களால் சரியாக உச்சரிக்கத் தெரியாது. பாலாஜி ஐயர், மகாலிங்கம் ஐயர் என்பதுபோல வாவேசு ஐயர் என்றுதான் வெகுகாலமாக நினைத்துக்கொண்டிருந்தேன். பிறகுதான் அது வரகனேரி வேங்கடேச  சுப்பிரமணிய ஐயர் என்கிற பெயரின் முதலெழுத்துகள் கூடி உருவான பெயர் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

பொற்கணங்கள் - முன்னுரை




ஒரு கன்னட நாட்டுப்புறக்கதை நினைவுக்கு வருகிறது. ஓர் ஊரில் ஒரு செல்வந்தரின் மகன் நோய்வாய்ப்பட்டிருந்தான். அவனுக்கு மருத்துவம் பார்க்காத வைத்தியரே அந்த ஊரிலும் அக்கம்பக்கத்து ஊர்களிலும் இல்லை. அந்த அளவுக்கு எல்லோரும் வந்து அந்தச் சிறுவனுக்கு வைத்தியம் பார்த்துவிட்டார்கள். எந்த மருந்தும் அவனைக் குணப்படுத்தவில்லை. சிறுவனின் ஆரோக்கியமும் நாளுக்குநாள் குன்றியபடியே இருந்தது. அதை நினைத்து செல்வந்தர் மிகவும் மனம் வருந்தினார். ஏதாவது தெய்வக்குற்றமாக இருக்கக்கூடும் என்று யாரோ ஒரு சொந்தக்காரர் சொன்னதை முக்கியமானதாக எடுத்துக்கொண்டு, ஊரூராகச் சென்று எல்லாக் கோயில்களிலும் தரிசனம் செய்து மனமுருக வேண்டிக்கொண்டார். அந்தப் பிரார்த்தனைகளும் பலனளிக்கவில்லை.