Home

Saturday 26 October 2019

குரங்கை விழுங்கிய கோழி - கட்டுரை



எண்பதுகளின் இறுதியில் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி தாவணகெரெ என்னும் இடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அந்த மாவட்டத்தின் ஆட்சியர் எங்கள் துறைக்கு நுண்ணலை கோபுரமொன்றைக் கட்டுவதற்காக அரசு இடத்தை ஒதுக்கித் தருவதாக வாக்களித்திருந்தார். ஆனால் எழுத்துமூலமாக அதற்குரிய ஆணையை அவர் இன்னும் வழங்காமலிருந்தார். எத்தனை நாட்களானாலும் தங்கியிருந்து வாங்கிவரும்படி எனக்கு நிர்வாகம் கட்டளையிட்டிருந்தது. இரண்டு நாட்கள் அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்வையாளர் வளாகத்தில் அமர்ந்துகொண்டு நான் கையோடு கொண்டுசென்றிருந்த புத்தகங்களையெல்லாம் படித்ததுதான் மிச்சம். 

இரு கவிதைகள்





1. கனவு வழி

இந்த நகரம் என்னைப் பிணைத்த சங்கிலி
என்று தெரியும்
இங்குதான் வாழ்ந்தாக வேண்டும்
என்கிற விதியும் தெரியும்
இருந்தாலும் எனக்கு என் ஊர் தான் முக்கியம்
ஊர் பற்றிய கனவுகள் முக்கியம்

சிற்றூர் வரலாறு - கட்டுரை




மரம் நட்டவன்என்னும் பிரெஞ்சுச் சிறுகதையொன்று பல ஆண்டுகளுக்கு முன்னால் மஞ்சரி இதழில் வெளிவந்திருந்தது. என் பள்ளிப்பருவத்தில் நூலகத்தில் அதைப் படித்தேன். உலகமே போர்களில் திளைத்திருக்கிறது. புகுந்த ஊர்களையெல்லாம் அழித்து பாலைவனமாக்குகிறது. அதே நேரத்தில் அப்போரிலிருந்து வெளியேறிய ஒருவன் வறண்ட பொட்டல்வெளியை பல ஆண்டுகள் பாடுபட்டு ஒரு காடாக மாற்றுகிறான். மரங்களைத் தவிர வேறெந்த சிந்தனையும் அவன் மனத்தில் இல்லை. அந்தக் கதை  பிரெஞ்சு வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது

Monday 14 October 2019

வேதரத்தினம் பிள்ளை - தொண்டும் தியாகமும் - கட்டுரை



12.03.1930 அன்று காந்தியடிகள் உப்புசத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து 79 தொண்டர்களுடன் புறப்பட்டு 240 மைல் தொலைவிலிருந்த தண்டி கடற்கரைக்குச் சென்று உப்பெடுக்கும் நோக்கத்துடன் அந்தப் பயணம் திட்டமிடப்பட்டது. இருபத்திநான்கு நாட்கள் நீண்ட அந்தப் பயணத்தில் தங்குமிடங்களைத் தீர்மானித்து உரிய ஏற்பாடுகளைச் செய்தவர் வல்லபாய் பட்டேல்.  தேசம் முழுதும் இந்தப் போராட்டம் பரவவேண்டும் என நினைத்த ராஜாஜி தமிழ்நிலத்தில் ஒரு சத்தியாகிரகத்தைத் திட்டமிட்டார். பல்வேறு நகரங்களிலிருந்து நூறு தொண்டர்கள் திரண்டு 13.04.1930 அன்று திருச்சியில் டாக்டர் தி.சே.செள. ராஜன் வீட்டிலிருந்து வேதாரண்யத்தை நோக்கிக் கிளம்பினார்கள்.

அவினாசிலிஙம் - இலட்சியப்பாதையை நோக்கி - கட்டுரை



     1934 ஆம் ஆண்டில் காந்தியடிகள் தமிழகத்தில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, குன்னூரில் சில நாட்கள் தங்கினார். அங்கிருந்து உதகை, கோத்தகிரி போன்ற இடங்களுக்குச் சென்று வந்தார். பல இடங்களில் ஒலிபெருக்கி வசதி இருப்பதில்லை. ஆனால் காந்தியைப் பார்ப்பதற்காகவும் அவருடைய பேச்சைக் கேட்பதற்காகவும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுவிடுவார்கள். அப்போது காந்தியின் உரையை குரல்வலிமை உள்ள யாரேனும் ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்வார்கள். உதகையில் அவருடைய உரையை மொழிபெயர்த்தவர் ஸ்ரீசுப்ரி என்பவர். காந்தியடிகள் அவரைத் தம்முடைய ஒலிபெருக்கி என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.

Tuesday 8 October 2019

ஒரு புதையலைத் தேடி




பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுதிஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியமான கதைகளில் ஒன்றுஅழகி”. தனது இளம்பருவத்தில் அப்பா அழகான ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிய செய்தியை அறிந்துகொள்கிறான் மகனான இளைஞன்.  யாரும் தடுத்துக் கட்டுப்படுத்தமுடியாத  இளம்வயதுத் துடிப்பில் இருப்பவன் அவன். தன் அப்பாவைக் கட்டிப் போட்ட அழகு எப்படிப்பட்டது என்று பார்ப்பதற்காக ஒருநாள் புறப்பட்டுச் செல்கிறான்.  அந்தப் பெண்ணின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். கதவைத் தட்டிவிட்டுக் காத்திருப்பவன் முன்னால் அரைகுறைப் பார்வையோடு, முடிநரைத்து, உடல்சுருங்கி, தோல்வற்றிய ஒரு மூதாட்டி வந்து நிற்கிறாள். தேடி வந்த விவரம் சொன்னதும் இளைஞனின் கையைப் பற்றி மெல்ல அழுத்திஅவரு புள்ளயா நீ?” என்று தாய்மை சுடர்விடும் கண்கள் பனிக்கக் கேட்கிறாள். அழகு என்பது உடலில் இல்லை, கண்களின் தாய்மையில் இருக்கக்கூடிய ஓர் அம்சம் என நாம் உணர்ந்துகொள்ளும் தருணம் அது. அந்த உணர்வை அவன் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காத்திருக்கவேண்டியிருந்தது.

வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி



சிவராம காரந்த்தின் சோமனின் உடுக்கை

முப்பதுகளில் எழுதப்பட்ட ஒரு நாவல் இன்றளவும் புதுப்புது வாசகர்களை ஈர்த்தபடி நெருக்கமாக இருப்பது மிகப்பெரிய அதிசயம். தன் உள்ளடக்கத்தாலும் மொழிப் பயன்பாட்டாலும் பல படைப்புகள் காலத்தால் உதிர்ந்து போய்விடுகின்றன. மிகக் குறைவான படைப்புகள் மட்டுமே காலத்தைத் தாண்டி நிற்கும் வலிமை உள்ளவையாக உள்ளன. தமிழில் பாரதியார் மற்றும் புதுமைப்பித்தன் படைப்புகள் அத்தகையவை. மலையாளத்தில் தகழி, பஷீர் படைப்புகளும் அப்படிப்பட்டவை. கன்னடத்தில் சிவராம காரந்த், குவெம்பு, மாஸ்தி போன்றவர்களின் படைப்புகளையும் அவ்வரிசையில் வைக்கலாம். சிவராம காரந்த்தின் பாட்டியின் நினைவுகள்”, “அழிந்த பிறகுஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே தமிழ் வாசகர்களுக்கு நேற்றுவரை படிக்கக் கிடைத்தன. மூன்றாவதாக இப்போது சோமனின் உடுக்கைவந்திருக்கிறது.