சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி பாரதி புத்தகாலய வழியாக வெளிவந்திருக்கும் ’எங்கள் பாட்டி எங்கள் தாத்தா’ தொகுதியிலிருந்து சில பாடல்கள்.
சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி பாரதி புத்தகாலய வழியாக வெளிவந்திருக்கும் ’எங்கள் பாட்டி எங்கள் தாத்தா’ தொகுதியிலிருந்து சில பாடல்கள்.
கடந்த சில ஆண்டுகளில் ’சர்வோதயம் மலர்கிறது’ இதழிலும் பிற இதழ்களிலும் அவ்வப்போது எழுதிய பதினான்கு கட்டுரைகளைத் தொகுத்து பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் இப்போது ஒரு புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் வெளிவந்த காலத்திலேயே நான் படித்திருக்கிறேன் என்றபோதும் ஒரு நூல் வடிவில் இப்போது அனைத்துக் கட்டுரைகளையும் ஒருங்கே படிப்பது நல்ல அனுபவமாக இருந்தது. நண்பர் விஜயராமலிங்கம் தம் மனத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு எந்த அளவுக்கு இடமளித்திருக்கிறார் என்பதை இந்த நூல் வழியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு கவிஞராக எழுத்துலகில் அடியெடுத்துவைத்தவர் விஜயானந்தலட்சுமி. அதைத் தொடர்ந்து இன்றைய இணையகால வாசகர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கலித்தொகை, மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு அழகான விளக்கநூல்களை எழுதினார். தேனி என்னும் நகரத்தின் வெவ்வேறு பரிமாணங்களை அழகான சொற்சித்திரங்களாகத் தீட்டி நூலாக வெளியிட்டார். இவான் துர்கனேவ், ஓ ஹென்றி ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவ்வாறாக, தன் படைப்புலகத்தை மெல்ல மெல்ல விரிவாக்கிக்கொண்டே செல்லும் விஜயானந்தலட்சுமி இப்போது தன் முதல் சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருக்கிறார்.
நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் ஓர் அழகான ஏரி இருக்கிறது. அதன் கரையைச் சுற்றி பத்தடி அகலத்துக்கு அச்சுக்கல் பதிக்கப்பட்ட நடைபாதை உண்டு. நடப்பதற்குச் எவ்விதமான சிரமமும் இல்லாத பாதை.
சென்னை புத்தகக் கண்காட்சி என்பது எழுத்தாளர்களும் வாசகர்களும் பங்கேற்றுக் களிக்கவேண்டிய ஒரு திருவிழா. ஒரு புத்தகத்தைக் கூட வாங்காவிட்டாலும் இரு புறங்களிலும் புத்தகக்கடைகளை மட்டுமே கொண்ட பாதையின் ஊடே நடந்துசெல்வது ஒரு பேரனுபவம். மேகங்களுக்கு நடுவில் மிதந்துசெல்வதுபோன்ற ஓர் அனுபவத்தை அளிக்கும் இடம்.
வாசிப்பு குறைந்துவிட்டது என்னும் கூற்று ஒரு புனைவு. உண்மையில் கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் வாசிப்பு பெருகியுள்ளதாகவே நான் உணர்கிறேன். முன்பெல்லாம் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இலக்கியக்கூட்டங்கள் அபூர்வமாகவே நிகழ்ந்து வந்தன.
கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் இந்தியாவின் அஞ்சல் துறையும் தொலைபேசித்துறையும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே துறையாகச் செயல்படத் தொடங்கியது. ஒவ்வொரு ஊரிலும் பயன்பாட்டில் இருக்கும் தொலைபேசி இணைப்புகள் பழுதின்றி இயங்கும் வண்ணம் பராமரிப்பதும் புதிய இணைப்புகளை வழங்குவதும் அதன் முதன்மை வேலையாக இருந்தது. அதே சமயத்தில் அடுத்தடுத்து உள்ள இரு நகரங்களை கேபிள் வழியாக இணைத்துத் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் அதன் இலக்காக இருந்தது.
தமிழ் மொழியில் வற்றாத படைப்பூக்கத்துடன் எழுதப்பட்டிருக்கும் சங்க இலக்கியம், இலக்கண நூல்கள், காப்பியங்கள், நவீன கவிதை, உரைநடை, ஆய்வு என விரிந்துகிடக்கும் பல்வேறு துறைகளைக் கற்றுத் தேர்ந்து, அவற்றில் தனக்குகந்த களத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வழியாக தன் முழு ஆற்றலை வெளிப்படுத்தும் படைப்பாளர்கள் பலர் நம் சூழலில் அன்றும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அது ஒரு வகையான தமிழ்த்தொண்டு. சங்ககாலம் முதல் எழுதப்பட்ட படைப்புகளையெல்லாம் தன் சமகாலத்தில் வாழும் மக்களிடையில் அறிமுகப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அறிமுகக்கட்டுரைகள் எழுதியும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியும் பரப்பிவந்த ஆளுமைகளும் அன்றும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அது இன்னொரு வகையான தமிழ்த்தொண்டு.
புறநானூற்றில் மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியை முன்வைத்து ஒளவையார் எழுதிய பத்து பாடல்கள் உள்ளன. எல்லாமே அதியமானின் புகழ், வீரம், வள்ளல் குணம் ஆகியவற்றை முன்வைத்து அவர் பாடியவை. அவற்றில் அதியமானுடைய வீரத்தை முன்வைத்து ஒளவையார் எழுதிய பாடல் மிகமுக்கியமானது.
கடந்த காலத்தைப்பற்றிய நினைவுச்சித்திரங்களையும் அனுபவக்குறிப்புகளையும் குறைவான சொற்களில் செறிவாக எழுதும் ஆற்றல் நிறைந்தவர் தஞ்சாவூர்க் கவிராயர். அவருடைய பல கட்டுரைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதொரு முக்கியமான செய்தி அடங்கியிருக்கும். தமிழுக்கு வளம் சேர்க்கக்கூடிய கட்டுரையாசிரியர்களில் அவர் முக்கியமானவர்.