Home

▼

Wednesday, 7 January 2015

பாக்குத்தோட்டம்



03.01.2015 அன்று மாலை சென்னை புக்பாயிண்ட் அரங்கில் உயிர்மை பதிப்பகம் பத்து நூல்களை வெளியிடும் நிகழ்ச்சியை நடத்தியது. அந்தப் பட்டியலில் என்னுடைய புதிய சிறுகதைத்தொகுதியான ’பாக்குத்தோட்டம்’ தொகுதியும் ஒன்று. வெளியிட்டவர் நீதியரசர் சந்துரு. பெற்றுக்கொண்டவர் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன். தொகுதியை அறிமுகப்படுத்தி அ.ராமசாமி உரையாற்றினார். பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் வசித்துவந்தபோது நாடகத்தன்மை உள்ள சிறுகதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை நாடகமாக அரங்கேற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். பாக்குத்தோட்டம் தொகுதியில் நாடகமாக மாற்றக்கூடிய சில கதைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். தலைப்புக்கதையான பாக்குத்தோட்டம் பற்றி பார்வையாளர்களுடன் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். வாழ்த்துரை வழங்கிய எஸ்.ராமகிருஷ்ணன் தொகுப்பில் உள்ள கல்தொட்டி, சைக்கிள் ஆகிய சிறுகதைகளை முன்வைத்து, அவை தனக்கு வழங்கிய வாசிப்பனுபவங்கள்பற்றி நெகிழ்ச்சியுடன் மிகவிரிவாகப் பேசினார்.


வெளியீடு

உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்
சென்னை - 18
விலை. ரூ.140