1920ஆம்
ஆண்டில் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமைப் போராட்டம் சாதி, மதம், இனம், மொழி என
எல்லா வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைத்தது.
‘காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டம் மிகமிக அறிவீனமான திட்டமாகும்’’ என வைசிராய்
ரீடிங் பிரபுவின் கூற்றை மக்கள் பொய்யாக்கினார். சூறாவளிச்சுழலென எங்கும் நிற்காமல்
காந்தியடிகள் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து மக்களிடையில் ஒத்துழையாமை இயக்கத்தின்
முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாடியபடி
இருந்தார். நீதிமன்றங்களை விலக்குவது, சட்டமன்றங்களை விலக்குவது, வெளிநாட்டுத்துணிகளை
விலக்குவது ஆகிய மூன்று விலக்குகளும் அவருடைய தாரகமந்திரங்களாக இருந்தன.