வேடிக்கை பார்ப்பவரின் பார்வை
எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் முழுமையான பெயர் செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார். திருவண்ணாமலையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். வழக்கு நிமித்தமாக ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களையும் சந்தித்து உரையாடிய அனுபவங்களே அவரை ஓர் எழுத்தாளராக வடிவமைத்தன.