Home

Monday, 30 December 2019

அம்புஜம்மாள் - எண்ணமும் ஏற்றமும் - கட்டுரை

1915ஆம் ஆண்டில் காந்தியடிகளும் கஸ்தூர்பாவும் சென்னைக்கு வந்துஇந்தியன் ரிவ்யுஇதழில் ஆசிரியரான ஜி.நடேசன் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். ஒருநாள் மாலையில் அவ்விருவரையும் அட்வகேட் ஜெனரலாக இருந்த சீனிவாச ஐயங்கார் விருந்துக்கு அழைத்திருந்தார். லஸ்சர்ச் சாலையில் இருந்த அவருடையஅம்ஜத்பாக்வீட்டுத் தோட்டத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் இருவரும் அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். காந்தியடிகள் ஒரு வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும் வடநாட்டவருக்குரிய தலைப்பாகையையும் அணிந்திருந்தார். கஸ்தூர்பா எளிமையான தூய வெள்ளைப்புடவையை குஜராத்தி பாணியில் உடுத்தியிருந்தார். எவ்விதமான ஒப்பனையும் ஆபரணமும் இல்லாமல் மிக எளிமையான தோற்றத்துடன் காணப்பட்டார் அவர். கையில் மட்டும் இரும்பினால் செய்யப்பட்ட காப்பு அணிந்திருந்தார். அவர் தோற்றம் ஒரு குஜராத்திக் குடியானவருடைய மனைவியைப்போல இருந்தது.

ஒரு சண்டைக் காட்சி - கவிதை




எங்கள் வண்டி வராத சாலையில்
ஏகப்பட்ட வாகனங்கள்
சத்தம் கேட்டுத் திரும்பினேன்
சண்டையைக் கண்டு அதிர்ந்தது மனம்

ஆளற்ற வெளியில் ஒரு குருடன் - கவிதை




பரிசுச் சீட்டுகளின் பெயர் சொல்லி
ஆளற்ற வெளியில் விற்கிறான் அக்குருடன்
அவன் குரலில் ஆவல் தொனிக்கிறது
காற்றில் படபடக்கும் தாள்களை
விரல் நுனிகளால் அழுத்தித் தடுக்கிறான்

காகம் - கட்டுரை




கனகனேரியின் கரைகள் உயர்த்தப்பட்ட பிறகு தினசரி நடைப்பயிற்சிக்குப் பொருத்தமான இடமாகிவிட்டது. நான்கு சுற்று நடந்த பிறகு மரத்தடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.
வேடிக்கை பார்ப்பது மனத்தை எளிதாக்கும் ஒரு கலை. அசையும் மரக்கிளைகள். அசையாத மணல்மேடுகள். நிறங்களால் ஈர்க்கும் பூக்கள். உதிர்ந்து புரளும் சருகுகள். அஞ்சியஞ்சி காலடி வைத்து இரையைக் கொத்தியெடுக்கும் காகங்கள். புல்தரையில் நடந்து செல்லும் மைனாக்கள்.  விர்ரென்று பறந்து கடந்துபோகும் குருவிகள். ஒன்றைப் பார்க்கும்போது, அதை நானாகவே எண்ணிக்கொள்வது ஒரு கற்பனை விளையாட்டு.  அதைப்போல ஆனந்தத்தாலும் ஆறுதலாலும் மனத்தை நிறைக்கும் கணங்கள் வேறில்லை. இந்த உலகத்தில்தான் எத்தனை வாழ்க்கைகள். எத்தனை அனுபவங்கள்.

Tuesday, 24 December 2019

சத்தியத்தின் ஆட்சி - காந்திய ஆளுமைகளின் கதைகள் -முன்னுரை




ஏதோ ஒரு புத்தகத்தைப்பற்றி ஒருநாள் இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக இலங்கையைச் சேர்ந்த இராஜகோபால் என்பவர் எழுதிய தன்வரலாற்று நூல் கிடைத்தது. தன்வரலாற்று நூல்களை வாசிப்பதில் எப்போதும் பெருவிருப்பம் கொண்டவன் நான். நாடகம், திரைப்படம், அறிவியல், அரசியல் என எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எழுதிய தன்வரலாற்று நூல்களை ஆர்வமுடன் படித்துவிடுவேன். அவர்கள் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவர்கள் வழியாக மெளனமாகக் கடந்துபோகும் வரலாற்றையும் அறிந்துகொள்வதை, அவர்களுடைய அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்னும் முறையில் என்னுடைய கடமை என்றே நான் நினைக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களை உடைய அந்தப் புத்தகத்தை கணிப்பொறியிலேயே படிக்க நான் விரும்பவில்லை. என்னால் அப்படி படிக்கவும் முடியாது. அதனால் உடனே கடைக்குச் சென்று அந்தப் புத்தகத்தை அச்சுப்படியாக மாற்றி எடுத்துவந்து அன்று இரவே படித்துமுடித்தேன்.

Friday, 20 December 2019

ஆதரவு - கட்டுரை



 பார்வையாளர் நேரம் தொடங்குவதற்கு இன்னும் நேரமிருந்ததால் கண்போன போக்கில் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே ஒவ்வொரு கட்டடமாக வேடிக்கை பார்த்தபடி நடக்கத் தொடங்கி பிணக்கிடங்கு வரைக்கும் சென்றுவிட்டேன். அதுவரைக்கும் பார்க்காத இடமென்பதால் எல்லாமே புதுமையாக இருந்தன. மதிலையொட்டிய முட்புதருக்குப் பின்னால் தாழம்பூவின் மணம் கமழ்ந்தது. ஆறேழு வேப்பமரங்களும் ஒரு ஆலமரமும் இரண்டு வாதுமை மரங்களும் அந்த இடத்துக்கு ஒரு கிராமத்துச் சூழலைக் கொடுத்தனஅவற்றின் நிழலில் இரண்டு அமரர் ஊர்திகளும் ஏழெட்டு இருசக்கர வாகனங்களும் நின்றிருந்தன.

சுவரொட்டிகளின் நகரம் - கவிதை

சுவரொட்டிகளின் நகரம்
..
சுவரொட்டிகளின் பின்னிருக்கிற மன நிலை
எப்பொழுதும் எனக்குப் புரிவதில்லை
வாழ்க அல்லது ஒழிக
சவால் அல்லது அறிவிப்பு
கோரிக்கை அல்லது நன்றி
வரவேற்றல் அல்லது வழியனுப்புதல்
எல்லாவற்றுக்குமே பஞ்சவர்ண சுவரொட்டிகள்
ஏன் ஆனது இப்படி?