Home

Sunday, 29 December 2024

என்.ஆர்.தியாகராஜன்: சமூகத்தொண்டும் சங்கிலித்தழும்பும்

 

தீண்டாமை ஒழிப்பு பரப்புரைக்காக நாடு தழுவிய ஒரு பெரும்பயணத்தை மேற்கொண்டிருந்த காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்திருந்தபோது, ஏறத்தாழ எல்லா முக்கிய நகரங்களுக்கும் சென்றார் என்று கூறும் அளவுக்கு விரிவான அளவுக்கு பயணம் செய்தார். பழமைவாதிகளின் எச்சரிக்கையை மீறி ஏராளமான ஆண்களும் பெண்களும் காந்தியடிகள் உரையாற்றிய எல்லாக் கூட்டங்களிலும் கலந்துகொண்டனர். அவர்கள் தம் சுற்றுப்பயணத்தின் நோக்கத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்வதற்காக ”நீங்கள் இந்த நிதியை எதற்காக அளிக்கிறீர்கள்?” என்று நேரிடையாகவே கேட்டபோது, அனைவரும் உற்சாகமான குரலில் “தாழ்த்தப்பட்டோர்களின் முன்னேற்றத்துக்காகத்தான்” என்று மக்கள் விடையளித்தனர். அந்தப் பதிலைக்  கேட்டு காந்தியடிகள் மனம் குளிர்ந்தார்.

விஷ்ணுபுரம் விருது விழா - சில நினைவுப்பதிவுகள்

 

24.12.2024

அன்புள்ள நண்பருக்கு

வணக்கம். நலம்தானே? வளவனூருக்குத் திரும்பிவிட்டேன். இன்னும் சில நாட்கள் இங்குதான் இருக்கவேண்டும்.

21, 22 இருநாள் விழா நிகழ்ச்சிகளும் கனவுக்காட்சிகளைப்போல நினைவில் மிதந்தபடி இருக்கின்றன.

Monday, 23 December 2024

வக்கிரம் - சிறுகதை

 

“சந்தத் தோப்புக்கு எப்படி போவணும்?’’ என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்னப்பிள்ள் கூட வழி காட்டிவிடும். ஊருக்குக் கிழக்கே தள்ளி இருக்கிறது அது. புதுசாகப் பார்க்கிற வெளியூர்க்காரன் ‘‘ஆயிரம் மாடுங்கள கொண்டாந்து கட்டலாம்பலக்குதே” என்று மூக்கில் விரல் வைத்து விடுவான். அவ்வளவு விஸ்தாரம். அவ்வளவு மரங்கள். தோப்பைச் சுற்றிச் சின்னச் சின்ன ஒற்றையடிப் பாதைகள் நீள்கின்றன. ஒரு பாதை சின்னபாபு சமுத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போகிறது. பாண்டிச்சேரிக்குக்கூட குறுக்குப்பாதை ஓடுகிறது. நிலா உச்சியில் இருக்கும்போது மாடுகள் ஓட்டிக்கொண்டு கிளம்பினால் விடியவிடிய பாண்டிச்சேரிக்குப் போய்ச் சேரமுடியும். தோப்பின் முகம் சாலையைப் பார்த்தபடி இருக்கிறது. தோப்பின் இடதுகைப்பக்கத்தில் ஆறாம் நெம்பர் சாராயக்கடை.

ஏழு லட்சம் வரிகள் - சிறுகதை

 

வெகு அருகில் சருகுகள் மிதிபடும் ஓசையைக் கேட்டு குணிதேவரும் நந்திதேவரும் குடிலுக்கு வெளியே வந்து பார்த்தார்கள். ஏதாவது விலங்காக இருக்குமோ என்கிற அச்சம் மனத்தில் சட்டெனப் பரவியதில் அவர்களுடைய இதயத் துடிப்புகள் அதிகரித்தன. இருளில் முதலில் எதையுமே சரியாகப் பார்க்க இயலவில்லை. சில கணங்களுக்குப் பிறகு குடிலை நோக்கி வரும் உருவத்தை அடையாளம் கண்டார்கள். அவசரமாக “வணக்கம் குருவே, வாருங்கள் என்றார்கள்.

Sunday, 15 December 2024

சாபம் - சிறுகதை


ஏற்பாடு செய்தாயா என்று கேட்டார் அப்பா. திறவுகோல் கொத்தை மாடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்தேன். தந்தையின் பார்வை என் மேலேயே பதிந்து கிடந்தது. சாதகமான ஒரு பதிலை எதிர்பார்க்கும் ஆசை துடிக்கும் அந்தக் கண்கள் நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. சுவரோரம் சரிந்து உட்கார்ந்தேன்.

கிணறு - சிறுகதை

 

பறையன் மாரப்பன் பாடெடுத்த வல்கிணற்றில்

நிறைகுட நீர்எடுத்துத் திரும்பும் பெண்டிரை

**

கடும் ராஜதண்டனைக்குள்ளான மாரப்பன் அல்லும் பகலும் ஓய்வு ஒழிச்சலில்லாமல் கிணறு தோண்டியபடி இருக்க ஈட்டியோடும் கேடயங்களோடும் சுற்றிலும் அரசாங்க வீரசேனை காவலிருந்தது. வேற்று ஆள்கள் அன்னதானம் செய்யாதபடிக்கும், சிரமதானம் செய்யாதபடிக்கும் அவர்கள் காவல் இருந்தார்கள்....

**

Sunday, 8 December 2024

பாவண்ணன் நேர்காணல் - 1

 

எல்லா இலக்கியமும் அறம் என்னும் மாபெரும் மதிப்பீட்டை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும் எழுதப்படுபவையே


பாவண்ணன் சமகால  நவீனத் தமிழ் இலக்கியச்சூழலில்முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என இடையறாது தமது பங்களிப்பை அளித்துவருகிறார்.  கன்னடத்திலிருந்து தலித் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழ் தலித் இலக்கிய அலை உருவாக அடிப்படைகளை அமைத்தவர்களில் ஒருவர்மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருதுதமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடாவாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது , விளக்கு அமைப்பின் வாழ்நாள்சாதனைக்கான புதுமைப்பித்தன் விருது, புதுச்சேரி அரசின், இலக்கியச்சிந்தனையின் சிறந்த நாவல் விருது என இவரது பங்களிப்புக்கு தமிழ்ச்சூழலில் தகுந்த கவனம் கிடைத்துள்ளதுடிசம்பர் மலேசியாவில் நடைபெறும் வல்லினம் விழாவுக்கு வருகை தரும் அவரை மலேசிய வாசகர்கள் கூடுதலாக அறிந்துகொள்ளும் வகையில் இந்நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது.