Home

Showing posts with label அறியப்படாத தமிழகம். Show all posts
Showing posts with label அறியப்படாத தமிழகம். Show all posts

Monday, 9 September 2024

சார்புநிலை என்னும் திரை


ஒரு மொழியின் இலக்கிய வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு கடுமையான உழைப்பும் சார்பற்ற மனநிலையும் தேவைப்படுகின்றன. உழைப்பின் அளவில் குறை நேரும்போது போதுமான ஆதாரங்களுடன் ஒன்றை முன்வைக்கமுடியாத தடுமாற்றம் நேரும். சார்பற்றுப் பார்க்க முடியாதபோது, சொந்த விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு படைப்பை மதிப்பிடநேர்ந்துவிடும்