Home

Showing posts with label ஆலய நுழைவுப் போராட்டம். Show all posts
Showing posts with label ஆலய நுழைவுப் போராட்டம். Show all posts

Monday, 6 January 2020

வைத்தியநாத ஐயர் - செயலின் பாதையில் - கட்டுரை




சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக வெளிநாட்டுத் துணிமணிகளைப் புறக்கணித்து இராட்டையில் நூல் நூற்றலையும் கதராடைகள் அணிவதையும் தொடர்ச்சியாக வலியுறுத்தினார் காந்தியடிகள். கதர்ப்பிரச்சாரத்துக்காகவே நாடெங்கும் பயணம் செய்து மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்க முனைந்தார். 1921 ஆம் ஆண்டில் பிரச்சாரப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் சென்னையில் தங்கி கூட்டங்களில் கலந்துகொண்ட பிறகு மதுரைக்குப் புறப்பட்டார்.