Home

Showing posts with label எனக்கெனப் பொழிகிறது தனிமழை. Show all posts
Showing posts with label எனக்கெனப் பொழிகிறது தனிமழை. Show all posts

Wednesday, 13 July 2022

தாய்மையின் சாயல்

 

      சிற்சில சமயங்களில் நள்ளிரவில் திடீரென தூக்கம் கலைந்துவிடும். அதுவரை காட்சிப்படங்களாக நகர்ந்துகொண்டிருந்த கனவு சட்டென அறுந்துவிடும். கனவில் நிகழ்ந்தது என்ன என்பதே புரியாது. எவ்வளவு யோசித்தாலும் ஒரு காட்சியைக் கூட நினைவிலிருந்து மீட்டெடுக்கமுடியாது.  அதற்குப் பிறகு தூங்கவும் பிடிக்காமல் எழுந்து சத்தம் காட்டாமல் மாடிக்குச் சென்று வானத்தைப் பார்த்தபடி நின்றிருப்பேன். இத்தகு அனுபவம் ஒரு சிலருக்காவது ஏற்பட்டிருக்கும்.