Home

Showing posts with label கமலாதாஸ். Show all posts
Showing posts with label கமலாதாஸ். Show all posts

Friday, 11 May 2018

பறவையாகவும் குஞ்சாகவும் - கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’



மலையாள மொழியின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கமலாதாஸ். பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். கமலாதாஸின் சிறுகதைகளை ஏற்கனவேசந்தன மரங்கள்என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ள நிர்மால்யா அவருடைய தன்வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து கடந்த 2009-ல் மறைந்துவிட்டவர். தன் கவிதைகளாலும் கதைகளாலும் பெரிய அளவில் வாசக கவனத்தைப் பெற்ற கமலாதாஸ் தன் நாற்பதுகளையொட்டிய வயதில் தன்னுடைய தன்வரலாற்றை ஒரு தொடராக எழுதினார். அந்தத் தொடர் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுபதுகளில் வெளிவந்து அவருடைய புகழ்வெளிச்சத்தை மேலும் அதிகமாக்கியது. ஏறத்தாழ  நாற்பதாண்டுகள் கழித்து நிர்மால்யாவின் மொழியாக்கத்தில் அந்த நூல் தமிழ்வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது. சொந்த அனுபவம் சார்ந்து கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கும் முன்னுரை இப்புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நிர்மால்யாவின் மொழியாக்கம் சிறப்பாக உள்ளது.