09.05.1929
அன்று சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளைச் சந்திப்பதற்காக மேலைநாட்டுமுறையில் உடையணிந்த இளைஞரொருவர் வந்திருந்தார். இங்கிலாந்தில் வணிகநிர்வாகவியல் துறையில் இளநிலைப் பட்டமும் அமெரிக்காவில் பொதுநிதித் துறையில் உயர்நிலைப் பட்டமும் பெற்றவர் அவர். அயல்நாட்டிலேயே செய்யத் தொடங்கிய வேலையைத் துறந்து தாயின் விருப்பத்துக்கிணங்க இந்தியாவுக்குத் திரும்பி மும்பை நிறுவனமொன்றில் தணிக்கையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார் அவர்.