19.09.1921 அன்று காந்தியடிகள் கடலூரில் அகிம்சையைப்பற்றியும் தீண்டாமைப்பழக்கத்தை கைவிடவேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் நீண்ட நேரம் உரையாற்றினார். தீண்டாமை என்னும் கறையை அகற்றாமல் நாம் பெறும் சுயராஜ்ஜியத்துக்குப் பொருளே இல்லை என்றும் நாட்டில் ஆறில் ஒரு பங்கு பிரிவினரை தீண்டத்தகாதவர்களாக்கி வைத்துள்ள நம் தேசத்தை நாளை இந்த உலகம் தீண்டத்தகாத இடமாகக் கருதி ஒதுக்கும் நிலை வரக்கூடுமென்றும் குறிப்பிட்டார்.