12.03.1930 அன்று காந்தியடிகள் உப்புசத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து 79 தொண்டர்களுடன் புறப்பட்டு
240 மைல் தொலைவிலிருந்த தண்டி கடற்கரைக்குச் சென்று உப்பெடுக்கும் நோக்கத்துடன்
அந்தப் பயணம் திட்டமிடப்பட்டது. இருபத்திநான்கு நாட்கள் நீண்ட
அந்தப் பயணத்தில் தங்குமிடங்களைத் தீர்மானித்து உரிய ஏற்பாடுகளைச் செய்தவர் வல்லபாய்
பட்டேல். தேசம் முழுதும்
இந்தப் போராட்டம் பரவவேண்டும் என நினைத்த ராஜாஜி தமிழ்நிலத்தில் ஒரு சத்தியாகிரகத்தைத்
திட்டமிட்டார். பல்வேறு நகரங்களிலிருந்து நூறு தொண்டர்கள் திரண்டு
13.04.1930 அன்று திருச்சியில் டாக்டர் தி.சே.செள. ராஜன் வீட்டிலிருந்து வேதாரண்யத்தை நோக்கிக் கிளம்பினார்கள்.