08.05.1933 அன்று சிறையிலிருந்து விடுதலை பெற்ற காந்தியடிகள் ஒத்துழையமை இயக்கப் போராட்டத்தை சில வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் அதற்குள் ஆங்கில அரசு அவசரமாக இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவந்த கடுமையான சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டுமென அரசாங்கத்திடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். ஒருவேளை ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு அரசு தன் வேண்டுகோளை நிராகரிக்க நேர்ந்தால் ஒத்துழையாமை இயக்கத்தை மீண்டும் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தார்.