Home

Showing posts with label ஜோடிக்காகம். Show all posts
Showing posts with label ஜோடிக்காகம். Show all posts

Sunday, 9 April 2017

பறவையாக முடியாத மானுடப்பறவை - திரிசடையின் "ஜோடிக்காகம்"



எங்கள் கிராமத்துக்கு நுழைவாயிலாக இருந்த கிராமணியாரின் உணவு விடுதி ஒருபோதும் மறக்கமுடியாத சித்திரம்.  ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே அந்தக் கடையைத் திறந்துவிடுவார்கள். இட்லிகளும் பூரிகளும் கொண்ட அகலத்தட்டுகளை ஒவ்வொன்றாகக் கொண்டுவந்து பலகார அடுக்குகளில் வைப்பார்கள்.  திருநீறு துலங்க கடைக்குள் நுழையும் பெரிய கிராமணி கல்லாப்பெட்டிக்கு மேலிருக்கும் தெய்வப்படங்களை தொட்டு வணங்கிவிட்டு நாலைந்து இட்லிகளை துண்டுதுண்டாகக் கிள்ளி ஒரு தட்டில் நிரப்பிக்கொண்டு வாசலுக்குச் செல்வார்.