15.07.2023 அன்று காலையில் நண்பர் வளவ.துரையன் வழியாக எழுத்தாளர் ஜீவகாருண்யன் அவர்களின் மறைவைப்பற்றித் தெரிந்துகொண்டேன். ஒருகணம் அவர் முகம் என் நினைவில் மின்னி மறைந்தது. குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியிலும் திசையெட்டும் சார்பில் சென்னையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியிலும் நெய்வேலி நகரத்தில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியிலும் சந்தித்து உரையாடியிருக்கிறேன். ஏராளமான தலைமுடியுடன் கூடிய அவருடைய முக அமைப்பை ஒருவராலும் மறந்துவிட முடியாது.