Home

Showing posts with label துரியோதனன். Show all posts
Showing posts with label துரியோதனன். Show all posts

Sunday, 10 May 2020

திரை - சிறுகதை



சூரியன் மறைந்து சரியத் தொடங்கிய வேளையில் காலணிகள் அழுத்தமாகப் பதிந்து நெருங்கி வரும் ஓசை கேட்டது. தலையைத் திருப்பி ஓசை வந்த திசையில் பார்க்க முயன்றான் துரியோதனன். பிடறி நரம்புகள் முறுக்கிக் கொண்டதில் வலி தாளாமல் உதட்டைக் கடித்தான். அதற்குள் நெருங்கி வந்துவிட்ட அஸ்வத்தாமன் அவன் தோள்களைப் பற்றினான். வலியில் சரிந்த துரியோதனனின் கண்களைச் சில கணங்களுக்கு மேல் பார்க்க இயலாமல் பதற்றத்துடன் “துரியோதனா” என்றபடி தரையில் உட்கார்ந்தான். புன்னகையுடன் “நீ பிழைத்திருக்கிறாயா அஸ்வத்தாமா?” என்று கேட்டான் துரியோதனன்.