எழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை
முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன்.
பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் கணக்கு. கணக்குக்கு இணையாக எனக்கு இலக்கியத்திலும்
ஆர்வமிருந்தது. கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் எது கிடைத்தாலும் விரும்பிப் படித்தேன்.
எங்கள் தாத்தா வீட்டுக்குப் பின்னாலேயே ஒரு பெரிய வட்டார நூலகம் இருந்தது. நேரம் கிட்டும்
போதெல்லாம் அந்த நூலகத்துக்குச் சென்றுவிடுவேன். அந்த நூலகருடன் எனக்கு நல்ல தொடர்பிருந்தது.
அவருக்குத் தேவையான சின்னச்சின்ன வேலைகளைச் செய்து கொடுத்ததால் அவர் எனக்குச் சில சலுகைகள்
கொடுத்திருந்தார். அறைக்குள் தாங்கிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த
புத்தகங்களைத் தொட்டுப் புரட்டலாம். எடுத்துக்கொண்டு வந்து அங்கேயே உட்கார்ந்து படிக்கலாம்.
உறுப்பினராக இல்லாத எனக்கு அது பெரிய சலுகை.
Showing posts with label விஷ்ணுபுரம் விருது. Show all posts
Showing posts with label விஷ்ணுபுரம் விருது. Show all posts
Monday, 24 October 2016
Thursday, 15 January 2015
ஞானக்கூத்தன் பற்றி- பாவண்ணன்
கடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான
தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும்
உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த
கவிராயர்களுக்கு நடுவில் ஒரு காட்டுயானையைப்போல வந்து நின்றவர் பாரதியார்.
வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, கண்ணி, சிந்து என அவர் கையாளாத
பாவகைகளே இல்லை.
ஒவ்வொரு வடிவத்துக்கும் தன் சொற்களால் புது ரத்தத்தைச் செலுத்தினார்
அவர். அவர் எழுதிய கவிதைகளில் ஒவ்வொரு சொல்லும் ஓர் அம்புபோலப் பாய்ந்தது.
வேகம், வெப்பம், நேசம், நெருக்கம், கொஞ்சல், வெட்கம் எல்லாவற்றையும் தன்
எழுத்துகளில் கொண்டு வந்து நிறுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது. பரலி
சு.நெல்லையப்பரால் வெளியிடப்பட்ட கண்ணன் பாட்டும், நாட்டுப்பாட்டும்
புதியதாக அரும்பிக்கொண்டிருந்த தமிழ்க்கவிதை மாளிகைக்கு அடிக்கற்களாக
விளங்கின.
Labels:
இலக்கியம்,
எழுத்து,
ஞானகூத்தன்,
விருது,
விஷ்ணுபுரம் விருது,
ஜெயமோகன்
Subscribe to:
Posts (Atom)