Home

Showing posts with label எமர்சன். Show all posts
Showing posts with label எமர்சன். Show all posts

Sunday, 20 October 2024

இதுவோ உலகத்தியற்கை?

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மைசூரிலிருந்து விஜயா ஹரன் என்பவர் தொலைபேசியில் என்னை அழைத்தார். மைசூர் வானொலி நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவைத் தன் ஆதர்ச எழுத்தாளராகக் கருதுபவர் என்றும் அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பைரப்பாவின் மீது தான் கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய ஆக்கங்களைப்பற்றிய கட்டுரைகளை பிறரிடமிருந்து எழுதி வாங்கித் தொகுத்து இரு பெருந்தொகுதிகளாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்னார். அதற்குரிய கட்டுரைகளைத் திரட்டிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Tuesday, 27 February 2018

கதவு திறந்தே இருக்கிறது - எளிமையும் தியாகமும்



பாடப்புத்தகங்களுக்கு அப்பால் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை எங்கள் பள்ளிப் பருவத்திலேயே விதைத்த தமிழாசிரியர்களில் ஒருவர் ராதாகிருஷ்ணன். ஒரு வரியைச் சொல்லி, அவ்வரியை எங்கள் மனத்தில் பதியவைக்க ஒரு வகுப்பு நேரம் முழுதும் ஏராளமான விளக்கங்களையும் கதைகளையும் தங்குதடையில்லாமல் அடுக்கிக்கொண்டே செல்லும் ஆற்றல் அவருக்கிருந்தது. படிப்பதனால் என்ன பயன் என்னும் கேள்வியை முன்வைத்து ஒருநாள் எங்களோடு உரையாடினார் அவர். “எழுதப்பட்ட புத்தகம் என்பது ஒரு சிந்தனை. அதைப் படிக்கும்போது அந்தச் சிந்தனை நம்மை வந்தடைகிறது. அதைப்பற்றி யோசிப்பதன் வழியாகவும் விவாதிப்பதன் வழியாகவும் நாம் அதை நம்முடைய சிந்தனையாக ஆக்கிக்கொள்கிறோம். பிறகு நாம் அதைப்பற்றி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்” என்றார். தொடர்ந்து “நம் மனம் ஒரு பெரிய அணைக்கட்டுபோல. ஒரு பக்கம் ஆற்றிலிருந்து தண்ணீர்வரத்தும் இருக்கவேண்டும். இன்னொரு பக்கம் மதகிலிருந்து வெளியேறிச் சென்றபடியும் இருக்கவேண்டும்” என்று சொன்னார்.

Wednesday, 7 February 2018

கதவு திறந்தே இருக்கிறது – இசைவு நிகழும் கணம்

புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் கணிதப்பிரிவில் நான் பட்டப்படிப்பு படித்தபோது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ம.இலெ.தங்கப்பா. கவிதையின்பத்தையும் வாழ்க்கையின்பத்தையும் ஒரு புள்ளியில் இணைத்துக் காட்டிய அவருடைய வகுப்புகள் என்னுடைய புரிதலின் எல்லையை விரிவாக்கின. அவருடைய வீட்டு மேசையில் ஒருமுறை தன்னுணர்வு என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். புத்தம்புதிய மிகச்சிறிய புத்தகம். எமர்சன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை பெருஞ்சித்திரனார் மொழிபெயர்த்திருந்தார். நான் அதை எடுத்துப் புரட்டியதைக் கவனித்ததும் “எமர்சன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகமுக்கியமான சிந்தனையாளர். நீ அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்” என்று சொன்னார் தங்கப்பா. நான் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தேன்.