Home

Showing posts with label கெய்த்தான். Show all posts
Showing posts with label கெய்த்தான். Show all posts

Monday, 9 November 2020

கெய்த்தான் : சோர்வும் துயரமும் தொண்டருக்கில்லை

 


1920ஆம் ஆண்டில் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் வெகுவேகமாகப் பரவி தீவிரமடைந்தது. அகிம்சைவழியில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் பெண்களும் ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கில் பங்கேற்று சிறைபுகுந்தனர். அயல்நாட்டுத் துணிகளைப் புறக்கணித்தல், அயல்நாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளின் முன்னால் மறியல் செய்தல், கள்ளுண்ணாமையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தல், கள்ளுக்கடைகளின் முன்னால் மறியல் செய்தல், கதராடைகளை அணியும்படி பிரச்சாரம் செய்தல், நூல்நூற்றல் போன்ற செயல்களையும் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் படிப்படியாக இணைத்துக்கொண்டார். கதராடைகளைப் பயன்படுத்துவது பெருகப்பெருக, மிகக்குறைந்த  வருமானமுடைய ஏழைகள்கூட நிறைவான வாழ்க்கையை வாழமுடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். 

Friday, 15 May 2020

நாடு, இலட்சியவாதம், மாற்றம் - கட்டுரை




பள்ளிப்பருவத்தில் மனப்பாடச்செய்யுளாக இருந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப்பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும். எதிலும் பற்று கொள்ளாத, ஆசை வைக்காத, அதனாலேயே எந்தத் துன்பத்திலும் அகப்பட்டுக்கொள்ளாத, அனைத்தையும் ஏற்றுக்கொள்கிற ஒரு வாழ்க்கையை அது முன்வைப்பதாக எங்கள் ஆசிரியர் அதற்குப் பொருள் சொன்னார். அவருடைய பேச்சுத்திறமையின் காரணமாக ‘நீர்வழிப் படூஉம் புணைபோல’ என்னும் உவமை அன்றே மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஆற்றின் போக்கில் அசைந்துபோகும் தெப்பத்தைப்போல இயற்கையின் வழியில் வாழ்க்கை மனிதகுலத்தை அழைத்துச் செல்கிறது என அன்று அவர் வழங்கிய தத்துவ விளக்கத்தைக் கேட்டு மயங்கிவிட்டேன். பிறகு காலப்போக்கில் அந்த உவமையை நானே பல இடங்களில் அவரைப்போலவே எடுத்துரைக்கத் தொடங்கினேன்.