Home

Showing posts with label நாகரத்தினம் கிருஷ்ணா. Show all posts
Showing posts with label நாகரத்தினம் கிருஷ்ணா. Show all posts

Saturday, 31 August 2024

வெறுப்பும் வேதனையும்

 

அன்புள்ள நண்பர்களே, எல்லாருக்கும் என் மாலை வணக்கங்கள். கடந்த ஐந்தாண்டுக் காலமாக தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களை வாசித்துக்கொண்டு வரும் ஒரு வாசகனுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியின் சில முக்கியமான ஆக்கங்களை தமிழில் மொழியாக்கம் செய்து வழங்குகிறவராகவும் பிரெஞ்சு மொழியின் இலக்கிய ஆளுமைகளைப்பற்றி அறிமுகம் செய்பவராகவும் அவர் திகழ்ந்து வந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளராக மட்டுமல்ல, குறிப்பிடத்தகுந்த நாவலாசிரியராகவும் அவர் தொடர்ந்து இயங்கி வருகிறார். திண்ணை இணையஇதழ் அவருடைய படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

Monday, 26 April 2021

செமொன் தெ பொவ்வார் - பெண்ணியக்கத்தின் முன்னோடி - நூல் அறிமுகம்

 

உலக அளவில் பெண்ணியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் சிமொன் தெ பொவ்வார்.  தத்துவத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.  நாவலாசிரயராகத் தொடங்கிய அவருடைய இலக்கியப் பயணம் பெண்ணியச் சிந்தனைகளுக்கு ஒரு தத்துவமுகத்தை உருவாக்கும் முயற்சியாக விரிவடைந்தது.  இருத்தலியல், உளவியல், மார்க்சியம் என எல்லாத் தளங்களிலும் நிலவும் பெண் கருத்தியலைத் தொகுத்து சமகாலத்திய சிக்கல்களுடன்  அவை பொருந்தியும் விலகியும் செல்கிற தடங்களை அடையாளம் கண்டு முன்வைத்தார் அவர். அவருடைய "இரண்டாம் இனம்" என்னும் நூல் உலக அளவில் வாசிக்கப்பட்ட முக்கியப் புத்தகம்.  கடந்த ஆண்டு கன்னடத்தில் அந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டு விரிவான அளவில் விவாத அரங்குகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.  முழு நூலாக இல்லாவிட்டாலும் அதன் சிந்தனைப்பாதையை அடையாளம் காட்டும் விதமாக இச்சிறுநூலை நம் தமிழில் மொழிபெயர்த்துத் தொகுத்தளிக்கிற நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு தமிழ்ச்சிந்தனை உலகம் கடமைப்பட்டிருக்கிறது. தத்துவத்துக்கே உரிய தர்க்க ஒழுங்குள்ள வாதவிவாதங்களின் லயத்தையும் சாரத்தையும் உயிர்ப்புடன் தமிழில் தருவதற்கு அவருடைய பிரெஞ்சு ஞானமும் தமிழ்ப்புலமையும் உதவியிருக்கிறது.