Home

Showing posts with label ரா.ஸ்ரீனிவாஸன். Show all posts
Showing posts with label ரா.ஸ்ரீனிவாஸன். Show all posts

Wednesday, 26 April 2017

அகத்தில் மலரும் தெளிவு - ரா. ஸ்ரீனிவாஸனின் "அசையாச் சிறுகல்"



நாள் முழுக்கப் பார்த்தாலும் இன்னும் கொஞ்சநேரம் பார்க்கலாமே என்று தோன்றவைக்கிற அளவுக்கு அழகு நிறைந்தவை ஹொய்சளர் காலத்துச் சிற்பங்கள்.  ஒரே ஒரு சதுர அடி பரப்பளவுள்ள கற்களில்கூட கச்சிதமும் நளினமும் சொக்கவைக்கிற அழகும் பொருந்திய சிற்பங்களைச் செதுக்கிவைத்திருக்கிறார்கள்.  பலவிதமான நிலைகளில் அவர்கள் செதுக்கியருக்கும் நடனநங்கையர்களுடைய தோற்றத்தின் வசீகரத்துக்கு ஈடு இணையே இல்லை.  மல்லிகார்ஜூனனுக்கும் லட்சுமிநாராயணனுக்கும் எழுப்பப்பட்ட கோயில்களில் கருவறை தவிர வேறொன்றும் வேறுபாடில்லை.  தூண்களிலும் சுற்றுச்சுவர்களிலும் எங்கெங்கு நோக்கினும் சிற்பங்களே காணக்கிடைக்கின்றன.  என் சுவையை அறிந்துவைத்திருக்கும் நண்பரொருவர் தன்னுடைய கிராமத்தில் உள்ள ஹொய்சளர் காலத்துக்கு கோவிலொன்றை காண்பதற்காக அழைத்துச் சென்றார்.