பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுதி “ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியமான கதைகளில் ஒன்று “அழகி”. தனது இளம்பருவத்தில் அப்பா அழகான ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிய செய்தியை அறிந்துகொள்கிறான் மகனான இளைஞன். யாரும்
தடுத்துக் கட்டுப்படுத்தமுடியாத இளம்வயதுத்
துடிப்பில் இருப்பவன் அவன். தன் அப்பாவைக் கட்டிப் போட்ட அழகு எப்படிப்பட்டது என்று பார்ப்பதற்காக ஒருநாள் புறப்பட்டுச் செல்கிறான். அந்தப்
பெண்ணின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். கதவைத் தட்டிவிட்டுக் காத்திருப்பவன் முன்னால் அரைகுறைப் பார்வையோடு, முடிநரைத்து, உடல்சுருங்கி, தோல்வற்றிய ஒரு மூதாட்டி வந்து நிற்கிறாள். தேடி வந்த விவரம் சொன்னதும் இளைஞனின் கையைப் பற்றி மெல்ல அழுத்தி “அவரு புள்ளயா நீ?” என்று தாய்மை சுடர்விடும் கண்கள் பனிக்கக் கேட்கிறாள். அழகு என்பது உடலில் இல்லை, கண்களின் தாய்மையில் இருக்கக்கூடிய ஓர் அம்சம் என நாம் உணர்ந்துகொள்ளும் தருணம் அது. அந்த உணர்வை அவன் பெறுவதற்கு கால் நூற்றாண்டு காத்திருக்கவேண்டியிருந்தது.
Showing posts with label வ.வெ.சு.ஐயர். Show all posts
Showing posts with label வ.வெ.சு.ஐயர். Show all posts
Tuesday, 8 October 2019
Thursday, 5 April 2018
வரலாறாக வாழ்ந்த மாமனிதர் - முன்னுரை
மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் பிறந்திருந்தால் மதுரைவீரன், தேசிங்குராஜா, கட்டபொம்மன் போல மக்களின் வாய்வழிப்பாடல்களிலும் கதைகளிலும் இடம்பெற்றிருக்கக்கூடிய மாபெரும் ஆளுமையாக வ.வே.சு.ஐயர் விளங்கியிருக்கக்கூடும். அதற்கு முற்றிலும் தகுதியானவராகவே அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. எங்கள் பள்ளிக்கூட நாட்களில் தேசவிடுதலைப் போராட்டவீரர்களைப்பற்றி உணர்ச்சியும் நெகிழ்ச்சியுமான குரலில் எங்களுக்கு எடுத்துச் சொன்ன கதைநேர ஆசிரியர்தான் முதன்முதலாக எங்களுக்கு வ.வே.சு.ஐயரைப்பற்றிச் சொன்னார். அவர் சொன்ன பல தகவல்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையை சிறையில் அடைத்து செக்கிழுக்கவைத்த ஆங்கிலேய கலெக்டர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கிப்பயிற்சி கொடுத்தவர் வ.வே.சு.ஐயர் என்கிற தகவல் எங்கள் இளம்நெஞ்சில் பசுமரத்தாணிபோலப் பதிந்துவிட்டது. அப்போதெல்லாம் அவர் பெயரைக்கூட எங்களால் சரியாக உச்சரிக்கத் தெரியாது. பாலாஜி ஐயர், மகாலிங்கம் ஐயர் என்பதுபோல வாவேசு ஐயர் என்றுதான் வெகுகாலமாக நினைத்துக்கொண்டிருந்தேன். பிறகுதான் அது வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய
ஐயர் என்கிற பெயரின் முதலெழுத்துகள் கூடி உருவான பெயர் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
Subscribe to:
Posts (Atom)