பழைய சென்னைச்சாலை என்பது அல்சூர் எரியிலிருந்து தொடங்குகிறது. அதன் வெவ்வேறு இடங்களிலிருந்து கிளைப்பாதைகள் நீண்டு ஆதர்ஷா திரையரங்கின் முன்னால் சந்தித்துக்கொள்ளும். அந்தப் பாதைகளுக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தால் ஏறத்தாழ ஒரு முக்கோணத்தைப்போல இருக்கும். சென்னைச்சாலையிலிருந்து நினைத்த பாதையில் வாகனங்கள் பிரிந்து நினைத்த திசையில் பறந்துபோகும். சாலைப்போக்குவரத்தைப் பொறுத்தமட்டில்
வசதிகள் அதிகமாக உள்ள இடம்தான் நாளடைவில் நெரிசலில் பிதுங்கிக் குழம்பித் தடுமாறும் இடமாக மாறும் என்ற எழுதாத விதிக்கு ஆதர்ஷா சாலைகளும் ஒருநாள் பலியாகின. உடனடியாக அக்கிளைப் பாதைகள் ஒருவழிப்பாதையாக
அறிவிக்கப்பட்டன.
Showing posts with label short story. Show all posts
Showing posts with label short story. Show all posts
Tuesday, 13 October 2015
Monday, 27 July 2015
பிரயாணம்
பெஞ்சமின் முசே முனகும் சத்தம் கேட்டது. ஆனால் கண்களைத் திறக்கவில்லை. கிடத்தப்பட்ட சிலைபோல படுத்திருந்தார். வைத்தியர் வந்து மருந்து கொடுத்துவிட்டுச்
சென்று மூன்றுமணி நேரத்துக்கும் மேல் கடந்துவிட்டது. விரைவாகவே எழுந்துவிடுவார்
என்றும் பசிக்கு ஏதாவது கேட்டால் சூடான கஞ்சித் தண்ணீர் மட்டும் தந்தால் போதும் என்றும் வைத்தியர் சொல்லியிருந்தார். சில கணங்களுக்குப் பிறகு “வீர்ப்பா வீர்ப்பா” என அவருடைய குரல் மட்டும் எழுந்தது. தரையில் உட்கார்ந்து அவருடைய பாதங்களைத் தேய்த்து சூடு உண்டாக்கியபடி இருந்த வீரப்பன் சட்டென்று துள்ளியெழுந்து
முசேயின் முகத்தைப் பார்த்தான். அக்கணமே அவர் அசைவற்ற ஆழத்துக்குப் போய்விட்டார். காதில் விழுந்த அவருடைய குரல் கனவா அல்லது நனவா என்று தடுமாறியது அவன் மனம். மெதுவாக “முசே முசே” என்று இரண்டு மூன்று முறை அழைத்தான். அவர் படுத்திருந்த கோலத்தில் துளிகூட மாற்றமில்லை.
பாலேடு நிறத்தைக் கொண்ட அவர் உடல் நலிவின் காரணமாக மேலும் வெளுத்துப் போயிருந்தது. மூன்று நாட்களாக மழிக்கப்படாத முடி கன்னமெங்கும் படர்ந்திருந்தது. அடிப்பகுதி பருத்து செதுக்கப்பட்டதுபோல காணப்பட்ட முசேயின் மூக்கையே வெகுநேரம் பார்த்துக்கொண்டு நின்றான் வீரப்பன்.. மூச்சு சீரான அளவில் தன்னிச்சையாக உட்செல்வதும் வெளியேறுவதுமாக இருந்தது. அறையின் திரைச்சீலையைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தபடி மதாம் மரியா “கண் தெறந்தாரா வீர்ப்பா?” என்று கேட்டாள். “இல்ல மதாம்” என்றபடி முசேயின் காலடியில் உட்கார்ந்து பாதத்தை அழுத்தித் தேய்க்கத் தொடங்கினான்.
Labels:
short story,
சிறுகதை,
பிரயாணம்
Thursday, 22 January 2015
ஒளிவட்டம்
“போ போ, வேற ஊடு போயி பாரும்மா. ஒரு தரம் சொன்னா காதுல உழாதா? இங்கயே நின்னுகினு தொணதொணக்காத. போ” என்று பிச்சைக்காரியை விரட்டும் தாத்தாவின் குரல் நடுக்கூடம்வரை கேட்டது. அப்போது ஆங்கிலப் புத்தகத்துக்கு நடுவில் வைத்திருந்த நாடக நோட்டீஸ்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். எல்லாமே சித்தப்பா கொண்டுவந்து கொடுத்தவை. ஒருகணம் கண்களை உயர்த்தி வாசல்பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் நோட்டீஸ்கள்மீது பார்வையைத் தாழ்த்தினேன். பள்ளிக்கூடப் பாடங்களைவிட அவற்றின்மீதுதான் எனக்கு ஆசை அதிகம். அவற்றை நான் உயிருக்குயிராக நேசித்தேன். ஆயிரம் முறை பார்த்த நோட்டீஸைக்கூட ஆயிரத்தோராவது முறை பார்க்கும்போது புதுசாகப் பார்ப்பதுபோலவே தோன்றும். அவற்றில் அச்சடிக்கப்பட்டிருக்கும் விதவிதமான புராணப் பாத்திரங்களின் படங்கள் என்னுடன் பேசுவதுபோலவும் என்னைப் பார்த்துப் புன்னகைப்பதுபோலவும் இருக்கும். அவர்கள் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தோற்றத்தைப் பார்த்ததுமே, அந்தத் தோற்றத்துக்குப் பொருத்தமான உரையாடல்களை புதுசுபுதுசாக மனம் உருவாக்கும். கற்பனையிலேயே அதை எனக்குள் பேசிப் பார்த்துக்கொள்வேன்.
சைக்கிள் மணிச்சத்தத்தால் என் கற்பனை கலைந்தது. மீண்டும் கண்களை உயர்த்தி வாசல் பக்கமாகப் பார்த்தேன். தபால்காரர் கொடுத்த கடிதத்தை தாத்தா திண்ணையிலிருந்து எழுந்துபோய் கைநீட்டி வாங்கிக்கொள்வது தெரிந்தது. கடிதத்தை அவர் முன்னும் பின்னும் திருப்பித்திருப்பிப் பார்ப்பதையும் கவனித்தேன். பிறகு எப்படியோ என் கவனம் மீண்டும் நோட்டீஸ்கள்மீது குவிந்துவிட்டது. அப்போது திண்ணையிலிருந்து தாத்தா அழைத்ததை காதுகள் உள்வாங்கிக்கொண்டாலும் மனம் உள்வாங்கிக்கொள்ளவில்லை. நாடக நோட்டீஸ்களின் விதவிதமான வண்ணத்திலும் படங்களின் வசீகரத்திலும் மனம் லயித்திருந்தது.
Thursday, 8 January 2015
பாக்குத்தோட்டம் தொகுதிக்காக எழுதப்பட்ட முன்னுரை
நான் குடியிருக்கும்
வாடகை வீட்டின் முதலாவது மாடி வாசலில் ஒரு ஆள் தனியாக நடக்கும்போது தாராளமாகவும்
இரண்டு ஆட்கள் இணைந்து நடக்கும்போது நெருக்கிக்கொண்டும் நடக்கிற அளவுக்குத்தான்
இடம் இருக்கிறது. இடம் சின்னதாக இருக்கிறதே என்பதற்காக, செடி வளர்க்கிற ஆசையையும்
கனவையும் ஒதுக்கித் தள்ளிவிடவா முடியும்? எங்கெங்கோ தேடி, இறுதியாக மொட்டை மாடியில்
துவைத்த துணிகளை உலர்த்துகிற கொடிக்குக் கீழே சுவரோரமாக தொட்டி வைக்க ஒரு
சின்ன இடத்தைக் கண்டுபிடித்துவிட்டாள் என் மனைவி. ரோஜாவுக்கு இரண்டு தொட்டிகள்,
கற்பூரவல்லிக்கு
ஒரு தொட்டி, சோற்றுக்கற்றாழைக்கு ஒரு தொட்டி, துளசிக்கு ஒரு தொட்டி என
மொத்தமாக ஐந்து மண்தொட்டிகள். தண்ணீர் ஊற்றப் போன ஒரு நாள் மாலை நான் அவற்றுக்கு
பஞ்சபாண்டவர் தொட்டி என்று பெயர் சூட்டினேன். அதைக் கேட்டு “ரொம்ப நல்லா இருக்குதே”
என்று அவள்
சிரித்துக்கொண்டே சுவரையொட்டி சாய்ந்தபடி காதுத் தொங்கட்டான்கள் அசைய நின்ற
கோலம் என் மனத்தில் அப்படியே ஒரு புகைப்படம்போல பதிந்துவிட்டது. தொட்டியை
நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் அந்தக் காட்சியும் ஒரு கணம் நெஞ்சில் மின்னி
மறைகிறது.
Wednesday, 7 January 2015
பாக்குத்தோட்டம்
03.01.2015 அன்று மாலை சென்னை
புக்பாயிண்ட் அரங்கில் உயிர்மை பதிப்பகம் பத்து நூல்களை வெளியிடும் நிகழ்ச்சியை
நடத்தியது. அந்தப் பட்டியலில் என்னுடைய புதிய சிறுகதைத்தொகுதியான ’பாக்குத்தோட்டம்’ தொகுதியும் ஒன்று.
வெளியிட்டவர் நீதியரசர் சந்துரு. பெற்றுக்கொண்டவர் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன். தொகுதியை
அறிமுகப்படுத்தி அ.ராமசாமி உரையாற்றினார். பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில்
வசித்துவந்தபோது நாடகத்தன்மை உள்ள சிறுகதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை நாடகமாக
அரங்கேற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். பாக்குத்தோட்டம் தொகுதியில் நாடகமாக
மாற்றக்கூடிய சில கதைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். தலைப்புக்கதையான
பாக்குத்தோட்டம் பற்றி பார்வையாளர்களுடன் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். வாழ்த்துரை
வழங்கிய எஸ்.ராமகிருஷ்ணன் தொகுப்பில் உள்ள கல்தொட்டி, சைக்கிள் ஆகிய
சிறுகதைகளை முன்வைத்து, அவை தனக்கு வழங்கிய வாசிப்பனுபவங்கள்பற்றி நெகிழ்ச்சியுடன்
மிகவிரிவாகப் பேசினார்.
Subscribe to:
Posts (Atom)
