(தொடர்ச்சி....)
“இது ஒன்னும் வாங்கன பூ
கிடையாது. எங்க வீட்டு தோட்டத்துல பூத்த பூ” என்று பெருமையாகச் சொன்னாள் புஷ்பா.
பூவே இல்லாத தோட்டத்தைப் பார்த்ததை அவன் மனத்துக்குள் நினைத்துக்கொண்டான். இந்தப் பெண் எதையோ மறைக்கிறாள் என்பதுமட்டும் அவனுக்குப் புரிந்துவிட்டது. மேன்மேலும் அவளைப் பொய் சொல்லவைக்க வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தான்.