Home

Monday 30 March 2020

கோடுகள் - கட்டுரை




எனக்காக என் நண்பர் தனது புத்தக அடுக்கில் தேடிக்கொண்டிருந்த புத்தகமே வேறு. ”ஒரு நிமிஷம், இதை பிடித்துக்கொள்ளுங்கள்என்று சொல்லி என்னிடம் கொடுத்த புத்தகமே வேறு. படங்கள் நிறைந்த புத்தகம் என்பதால் ஆர்வத்தில் புரட்டத் தொடங்கினேன்.

மூன்று முகங்கள் - கட்டுரை



 பேருந்திலிருந்து இறங்கும்போது நினைவுக்கு வரவில்லை. அருகிலிருந்த வங்கி .டி.எம்.மில் பணமெடுத்துக்கொண்டு வெளியே வந்தபோதும் நினைவுக்கு வரவில்லை. எதிர்பாராமல் என்னைக் கடந்துபோன தள்ளுவண்டியில் நாவல்பழக்குவியலைப் பார்த்துவிட்டு பொங்கிய ஆசையில் அரைகிலோ வாங்கிக்கொண்டு திரும்பியபோதும் நினைவுக்கு வரவில்லை. அதற்குப் பிறகு நாலைந்து குறுக்குச்சாலைகளைக் கடந்து முன்னும்பின்னுமாக நகர்கிற வாகனங்களின் ஊடே புகுந்து எங்கள் தெருவுக்குள் நுழைந்து நடக்கத் தொடங்கியபோதுதான் சட்டென நினைவுக்கு வந்தது.

Thursday 19 March 2020

நெருப்புத் திருவிழா - சிறுகதை




குடுமி குலுங்க மேளம் அடித்த ஆளைப் பார்த்ததுமே என்னால் சிரிப்பைத் தாங்கமுடியவில்லை. அது கோயில் என்பதுகூட மறந்துவிட்டது. பக்கத்தில் இருந்த சிவராமன் ஸ்.சும்மா இருடாஎன்று கண்ணை உருட்டி சமிக்ஞை கொடுத்தும்கூட அடக்கிக்கொள்ளமுடியவில்லை. வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். சிவராமன் முறைத்தான். ஒருகணம் வாயைப் பொத்திக்கொண்டேன். மறுகணமே ஆடும் அந்தக் குடுமியில் பார்வை பட்டுவிட மீண்டும் சிரிப்பு பொங்கியது. யார்டா அது க்ளுக்க்ளுக்னு சிரிக்கிறான். ஊருக்குப் புதுசா?” என்று சிவராமனைப் பார்த்துக் கேட்டார் ஒருவர். எங்க ஆஸ்டல் பையன்... திருழா பார்க்கணும்னான்...என இழுத்தான் சிவராமன். சரி... சரி.. மசமசன்னு எதுக்கு வந்து நிக்கறிங்க? வயசுப் பசங்க, போய் ஆளுக்கு ஒரு கட்டு மாஎல பறிச்சாங்க. காப்பு கட்டணுமில்லஎன்று எங்களை விரட்டினார் அவர்.

கோட்டோவியங்களை நோக்கி



நவீன ஓவியரான ஆதிமூலம் காந்தியடிகளின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டத்தையொட்டி, காந்தியடிகளை பல்வேறு தோற்றங்களில் காட்டும் எண்ணற்ற கோட்டோவியங்களை வரைந்து ஒரு கண்காட்சியாக வைத்திருந்தார். பிறகு அந்த ஓவியங்கள் தொகுக்கப்பட்டு நூலாகவும் வெளிவந்தது. ஒவ்வொரு ஓவியமும் பத்துப் பதினைந்து கோடுகளிலும் வளைவுகளிலும் அடங்கிவிடும். ஆனால் அவையனைத்தும் ஒன்றிணைந்து காந்தியடிகளை நேரில் பார்ப்பதுபோல உணரவைக்கும்.

Friday 13 March 2020

யார் மனிதன்? - ஆன்டன் செகாவ் சிறுகதைகள் - கட்டுரை




புதுமைப்பித்தன் காலத்திலிருந்து ஒவ்வொரு தலைமுறையிலும் பல எழுத்தாளர்களாலும் மொழிபெயர்ப்பாளர்களாலும் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ். இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினாறு நாடகங்களையும் எழுதியவர் அவர். நூற்றைம்பது ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் பழமை படியாத எழுத்துகளாக அவருடைய படைப்புகள் உள்ளன. மனிதர்களின் விசித்திரப்பண்புகளை கலைநயத்துடன் முன்வைத்திருக்கும் தன்மையினால் செகாவின் படைப்புகள் ஆலமரங்களென விழுதுவிட்டு உறுதியாக நின்றிருக்கின்றன. இறுதியாக மனிதன் என்பவன் யார் என்னும் கேள்வியைத் தொட்டு நிற்கும் கணம் ஒவ்வொரு வாசகனையும் கலைத்துப்போடும் அற்புதக்கணம்.

கிருஷ்ணம்மாள் - எல்லாம் செயல்கூடும் - கட்டுரை




இந்தி பிரச்சார சபையின் வெள்ளிவிழா சென்னையில் 25.01.1946 அன்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றுவதற்காக காந்தியடிகள் வந்திருந்தார். அன்றைய கூட்டத்தில் இந்தியா போன்ற பெரியதொரு நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் தாய்மொழிக்கல்வியிலும் இணைப்புமொழிக்கல்வியிலும் தேர்ச்சி பெறுவது மிகமுக்கியம் என்பதை காந்தியடிகள் வலியுறுத்திப் பேசினார். நான்கு நாட்கள் கழித்து அதே இடத்தில் நயி தலீம் பட்டமளிப்புவிழா நடைபெற்றது. ஆதாரக்கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சியை முடித்த இருபத்தாறு பேர்களுக்கு காந்தியடிகளே சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். அவருடைய உடல்நிலை அப்போது மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல்  தொடர்ந்து மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றிய காந்தியடிகள் 02.02.1946 அன்று மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

ஜெகந்நாதன் - கலங்கரை விளக்கம் - கட்டுரை

ஒருமுறை ஓர் ஆங்கிலேய அதிகாரி காந்தியடிகளைக் கைது செய்து விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தார். நீதிபதி தன் வழக்கப்படி காந்தியடிகளிடம்நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். “நான் நூல் நூற்கிறேன். நெசவு செய்கிறேன். விவசாயமும் செய்கிறேன்என்று காந்தியடிகள் பதில் சொன்னார். அப்போது அவருக்கு வயது 64. சுதேசிப்பொருட்களைப் பயன்படுத்துவதைப்பற்றிஇந்திய சுயராஜ்ஜியம்எழுதிய காலத்திலிருந்தே வலியுறுத்தி வந்த காந்தியடிகள் நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது ஒன்றே இந்திய விடுதலைக்கு வழிவகுக்கும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளின் விற்பனையால் இந்திய நெசவாளர்களின் வாழ்க்கை பாழடைந்துவிட்டதை அவர் கண்கூடாகக் கண்டுணர்ந்தார். இங்கிலாந்து துணிகளின் விற்பனைக்காக கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் டாக்காவில் மஸ்லின் நெசவு செய்துவந்த நெசவாளர்களின் கட்டைவிரலைத் துண்டித்து நெசவுத்தொழிலே அற்றுப்போகச் செய்த துயரவரலாற்றை அறிந்து அவர் துயரத்தில் உறைந்தார்.

Sunday 1 March 2020

சுதந்திரச்சிந்தனையும் வரலாற்றுச்சம்பவமும் - கட்டுரை



எங்கள் கிராமத்தில் எங்களுடைய வீட்டுக்கு அருகிலேயே ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. ஸ்டேஷன் என்பது ஓடுகள் வேய்ந்த ஒரு பெரிய கூடம். ஸ்டேஷனுக்கு வெளியே வில்வண்டிகளும் குதிரைவண்டிகளும் காத்திருக்க, உள்ளே ரயிலுக்காக காத்திருப்பவர்கள் உட்கார்ந்து கதைபேசிக்கொண்டிருப்பார்கள். சிறுவர்களாகிய நாங்கள் இன்னொரு ஓரத்தில் விளையாடிக்கொண்டிருப்போம். ரயில்கள் ஸ்டேஷனைக் கடக்கும்போதெல்லாம்இது ராமேஸ்வரம் போகும் ரயில், இது காசிக்குப் போகும் ரயில்என்று சுட்டிக்காட்டிப் பேசும் உரையாடல்கள் எங்கள் காதில் விழுந்தபடி இருக்கும். காசி, ராமேஸ்வரம் எல்லாம் எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் இடங்கள் என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்த வயது அது.

மூன்று பொக்கிஷங்கள் - கட்டுரை

சீனத்தைச் சேர்ந்த ஒரு நீதிமன்றத்தில் ஆவணக் காப்பாளராகப் பணிபுரிந்து வந்தார் ஒருவர். அரசின் சீர்கேடுகளும் மனிதர்களின் பேராசைகளும் ஊழல்களும் தன்னலம் சார்ந்த செயல்பாடுகளும் அவருக்குச் சலிப்பூட்டின. தன்னலவாதிகளுக்கு நடுவில் வாழ்வதே அவருக்குத் தீராத வேதனையாக இருந்தது.