Home

Sunday 26 February 2023

மேஜிக் தாத்தா - கட்டுரை


எங்கள் குடியிருப்பை ஒட்டி ஒரு பெரிய ஏரி இருக்கிறது. இன்னும் விரல் பழகாத சிறுவனொருவன் கோணலாக இழுத்துவிட்ட கோடுகளையெல்லாம்  மீண்டும் இணைத்து வட்டமாக்கியதுபோன்ற வடிவம் கொண்ட ஏரி.

எம்.வி.வி. என்னும் நித்ய தேனீ

  

‘மனித வாழ்க்கையே என் படைப்புகளின் ஊற்றுவாய்’ என்றும் ‘என் படைப்புகள் எல்லாவற்றிலும் நானே நிரம்பி வழ்கிறேன்’ என்றும் அறிவித்துக்கொண்டவர் எம்.வி.வெங்கட்ராம். அவருடைய நூற்றாண்டு நிறைவெய்தியிருக்கும் தருணத்தின் நினைவாக சாகித்ய அகாதெமி தன் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல்வரிசையில் அவரைப்பற்றிய அறிமுகநூலை வெளியிட்டிருக்கிறது.

Sunday 19 February 2023

அசைந்த கைகள் - கட்டுரை

  

”இந்திராநகர் டெலிபோன் எக்சேஞ்ச்சுக்கு எதுத்தாபுல கொஞ்ச தூரம் நடந்து போனா மிராண்டா இங்கிலீஷ் ஸ்கூல்னு ஒரு ஸ்கூல் வரும். அதுக்கு எதிர்பக்கமா ஒரு பஸ் ஸ்டாப் இருக்குது. அங்க வந்து வெய்ட் பண்ணுங்க. போதும். பத்தரையிலேர்ந்து பதினொன்னுக்குள்ள நான் அங்க வந்துடுவேன்” என்று நண்பர் சொல்லியிருந்தார். நான் அவரிடம் வாங்கிய சில புத்தகங்களைத் திருப்பியளிக்க வேண்டியிருந்தது. அதுபோலவே அவரும் எனக்கு ஒரு புத்தகத்தைக் கொடுக்கவேண்டியிருந்தது.

பலி - சிறுகதை

 பாதி பீடியோடு நெருப்பை அணைத்து காதில் செருகிக்கொண்டு ரிக்‌ஷாக்காரன் வருவதற்கும், மூன்று வயசுப் பையனை நடக்கவிட்டு கையைப் பிடித்தபடி கோயிலில் இருந்து இவள் வருவதற்கும் சரியாய் இருந்தது. பையனைத் தூக்கி முதலில் உட்கார வைத்துவிட்டு பிறகு தானும் உட்கார்ந்தாள் இவள்.

பீச்சுக்குப் போப்பா.”

ரிக்ஷா  நகர்ந்தது.

Sunday 12 February 2023

மாயாண்டி பாரதி : கருணை குடியிருந்த நெஞ்சம்

  

08.05.1933 அன்று சிறையிலிருந்து விடுதலை பெற்ற காந்தியடிகள் ஒத்துழையமை இயக்கப் போராட்டத்தை சில வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் அதற்குள் ஆங்கில அரசு அவசரமாக இயற்றி நடைமுறைக்குக் கொண்டுவந்த  கடுமையான சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டுமென அரசாங்கத்திடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். ஒருவேளை ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு அரசு தன் வேண்டுகோளை நிராகரிக்க நேர்ந்தால் ஒத்துழையாமை இயக்கத்தை மீண்டும் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தார்.

பயணம் - சிறுகதை


வாசலில் கத்தரிக்காய் நிறத்தில் கைனடிக் ஹோண்டா நிற்கிறது.   அது நிற்பதற்காகவே ஒரு மேடை கூட கட்டப்பட்டுவிட்டது.   இதற்கு முன்பு டி.வி.எஸ். சாம்ப் இருந்தது.   அதற்கு முன்பு வெறும் டி.வி.எஸ்.   காலம் நகர நகர வாகனமும் மாறிவிட்டது.   எல்லாவற்றிற்கும் முன்பு ஒரு சைக்கிள் வைத்திருந்தேன்.   அப்போது அந்த வாகன மேடையும் இல்லை. வீடும் இல்லை. ஆனால் அந்த நினைவுகள் மட்டும் மீண்டும்மீண்டும் மோதிக்கொண்டிருக்கின்றன.

Sunday 5 February 2023

பாவண்ணன் பாடல்கள் - புதிய தொகுதிக்கான முன்னுரை

விடுப்பில் புதுச்சேரிக்குச் சென்றிருந்த சமயத்தில், சிறந்த தமிழ்ப்பாவலரும் மறைந்த தமிழறிஞருமான ம.இலெ.தங்கப்பாவின் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தேன்.  சற்றுமுன் வீட்டுக்கு வந்து இறங்கிய புதிய புத்தகக்கட்டுகளைப் பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தார் தங்கப்பா.  என்னைப் பார்த்ததும் “வா வா” என்று புன்னகையுடன் வரவேற்றார்.

அகத்தூண்டுதலும் அற்புதத்தருணங்களும்

  

அசையும்போது தோணி

அசையாதபோதே தீவு

தோணிக்கும் தீவுக்குமிடையே

மின்னற்பொழுதே தூரம்

 

இது தேவதேவனின் கவிதை. விட்டல்ராவ் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரைத்தொகுதியின் பெயர் மின்னற்பொழுதுகள். அந்தத் தலைப்பை வாசித்ததுமே மனத்தில் தேவதேவனின் கவிதை வரிகள் எழுந்தன. தோணி, புறக்கண்ணால் பார்க்கமுடிகிற ஓர் உருவம். தீவு, அகக்கண்ணுக்கு மட்டுமே தென்படும் உருவம். பார்க்கும் மனவார்ப்பு உள்ளவருக்கே தென்படக்கூடிய அபூர்வமான உருவம் அது. அப்படிப் பார்க்கக்கூடியவர்களுக்கு அக்காட்சி மின்னலடிக்கும் நேரத்தில் தெரிந்து மறைந்துவிடுகிறது. பிறகு அந்தக் காட்சியை நினைவிலிருந்து மீட்டிமீட்டித்தான் பார்க்கவேண்டும்.