Home

Sunday 30 August 2020

தி.ஜானகிராமன் சிறுகதைகள் - வெள்ளத்தின் வேகம்


சரியான நேரத்தில் தொடங்கிய பருவ மழை பத்து நாட்களாக இடைவிடாமல் இரவும் பகலும் பொழிந்தபடி இருந்தது. ஓயாத மழையால் துங்கபத்திரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் அப்போது ஷிமோகாவில் வேலை செய்துவந்தேன். வெள்ளக்காட்சிகளை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த என் கண்கள் முதன்முதலாக வெள்ளத்தை நேருக்கு நேர் பார்க்க விழைந்தன. நண்பர்களிடம் என் விருப்பத்தைச் சொன்னதும் அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள்.

உயிர்பெற்ற சிற்பங்கள் - நினைவின் தாழ்வாரங்கள் - கட்டுரை

 

கலாப்ரியா தமிழ்மொழியின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர். தன் எழுத்தின் வழியாக பரவலான வாசகதளத்தை அடைந்தவர். அவருடைய பல கவிதைவரிகளை உத்வேகத்தோடு மனப்பாடமாகச் சொல்கிறவர்களை நான் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் கவிதைத்தளத்திலிருந்து ஏதோ ஓர் உணர்வு அவரை உரைநடையின்பால் செலுத்த, குன்றாத மனஎழுச்சியோடு வரிசையாக நாற்பத்தொன்பது கட்டுரைகளை எழுதிவிட்டார். புதிதாக உருவாகிவரும் இணையதளயுகம் அவரை வரவேற்று அணைத்துக்கொண்டது. அந்திமழை என்னும் இணையதளம் இக்கட்டுரைகளை ஒவ்வொரு வாரமும் பதிவேற்றி வெளியிட்டது. அச்சு ஊடகத்தில் அவருக்குக் கிடைத்த அதே அளவு வாசக ஆதரவு, இணைய ஊடகத்திலும் கிடைத்தது என்றே சொல்லவேண்டும். எந்த முன்திட்டமும் இல்லாத ஒரு மனம் உத்வேகத்தின் காரணமாக, தன் நினைவிலிருக்கும் மனிதர்களைப்பற்றியும் நிகழ்ச்சிகளைப்பற்றியும் தன்னிச்சையாக எழுதியவையாகவே இக்கட்டுரைகள் காணப்படுகின்றன. பெரிதும் தன்வரலாற்றுச்சாயல் பொருந்திய இக்கட்டுரைகளில் ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகள்வரையிலான முப்பதாண்டுகால இடைவெளியில் காலமும் மனிதர்களும் மாற்றமடைந்த விதத்தின் தடம் அழுத்தமாகப் பதிந்திருப்பதைப் பார்க்கலாம்.

காலமும் கனவுகளும் - சென்னையின் கதை (1921) - கட்டுரை

 

நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக கொரமண்டல் கடற்கரை என்று பெயர்பெற்றிருந்த வங்கக்கடற்கரையோரத்தில் இருந்த மதராஸபட்டிணம் என்னும் சிறிய கிராமம் கிழக்கிந்தியக்கம்பெனியால் வணிக விரிவாக்கத்துக்காக முதன்முதலாக வாங்கப்பட்டது. சிறுகச்சிறுக அக்கிராமத்துக்கு அரசியல் முக்கியத்துவம் உருவாகி அதிகாரமையமாக வளர்ந்தது என்பது வரலாறு. இந்தப் புத்தகம் அந்த வரலாற்றை காலவரிசை முறையில் முன்வைக்கிற புத்தகமல்ல. மாறாக, கிராமம் நகரமாகவும் மாநகரமாகவும் வளர்கிற போக்கில், உருவாக்கப்பட்ட கோட்டைகள், தேவாலயங்கள், காப்பகங்கள், அரண்மனை, பள்ளிகள் ஆகியவற்றைப்பற்றிய பதிவுகளைக் கொண்ட புத்தகம். அவற்றின் ஊடாக நகரம் உருமாறிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ளன. இவற்றின் உருவாக்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பிருப்பதால் வரலாற்றை வேறொரு கோணத்திலிருந்து அணுகுவதற்கு இந்தப் புத்தகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு தனிமனித அனுபவப்பதிவாக 1921 ஆம் ஆண்டில் இதை எழுதியவர் கிளின் பார்லோ என்னும் ஆங்கிலேயர். இப்போது இதன் மொழிபெயர்ப்பை சந்தியா பதிப்பகம் பிரசுரித்திருக்கிறது. மொழிபெயர்த்திருப்பவர் ப்ரியாராஜ். வேகமான வாசிப்புக்கேற்ற மொழிபெயர்ப்பு.

Monday 24 August 2020

அகத்தில் நிகழும் விளையாட்டு - கல்யாண்ஜி கவிதைகள்

 

கல்யாண்ஜியின் கவிதைகள் காட்சித்தன்மை நிறைந்தவை. ஒருவகையில் நம் சங்கக்கவிதைகளை நினைவூட்டுபவை. உயிர்ப்பான அபூர்வமான தருணங்கள் அவை. அக்காட்சிகள் தன்னளவில் தீர்மானமான எந்தப் பொருளையும் சுட்டவில்லை. இனிப்பை விழுங்கிய பிறகு நாக்கைக் குழைத்துக்குழைத்து அசைபோட்டு, இனிப்பின் சுவையில் திளைப்பதுபோல கல்யாண்ஜி தீட்டிவைத்திருக்கும் காட்சிச்சித்திரங்களும் அசைபோட்டு திளைக்கத்தக்கவை. திளைக்கும்தோறும் அக்கவிதைகள் புதுப்புது அனுபவங்களையும் அர்த்தங்களையும் வழங்கிக்கொண்டே இருக்கின்றன.

ஓவியத்திலிருந்து இலக்கியம்வரைக்கும் - விட்டல்ராவ் நேர்காணல்

 பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர் விட்டல்ராவ். நல்ல சிறுகதையாசிரியர். நாவலாசிரியர். ஓவியர். திரைப்பட விமர்சகர். வரலாற்று ஆர்வலர். எல்லாத் தளங்களிலும் எழுபதுகளிலிருந்து தொடர்ச்சியாக பங்களிப்பு செய்துவருபவர். போக்கிடம், நதிமூலம், வண்ண முகங்கள் ஆகிய மூன்றும் அவருடைய எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டான நாவல்கள். தமிழகக்கோட்டைகள் அருமையான ஒரு வரலாற்று ஆவணம். சமூக வரலாற்றையும் மனித உறவுகளையும் இணைத்து தன்வரலாற்றுச் சாயலோடு விட்டல்ராவ் முன்வைத்திருக்கும் வாழ்விலே சில உன்னதங்கள்கட்டுரைத்தொகுப்புக்கு தேசிய அளவில் குசுமாஞ்சலி விருது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பதாண்டு கன்னட கலைப்பட வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சுட்டிக்காட்டும் மிக முக்கியமான ஆவணநூலானகன்னட நவீன சினிமாகடந்த ஆண்டு வெளிவந்தது. ஈடுபட்ட எல்லாத் துறைகளிலும் தன் அழுத்தமான தடங்களைப் பதித்தவர் விட்டல்ராவ்.  ’பாரத சஞ்சார் நிகம்நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வுபெற்று தற்போது பெங்களூரில் வசித்துவருகிறார். மாதத்தில் ஒருநாள் அவரை நானும் நண்பர் திருஞானசம்பந்தமும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். நடமாடும் தகவல் களஞ்சியம் என்றே அவரைச் சொல்லலாம். ஒவ்வொரு விஷயம்சார்ந்தும் நம்மிடம் பகிர்ந்துகொள்ள அவரிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன. அபாரமான அவர் நினைவாற்றலைக் கண்டு பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியங்களில் மூழ்கியிருக்கிறோம். வழக்கம்போல ஒருநாள் நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது, அது ஒரு நேர்காணலின் சாயலில் இருப்பதை தற்செயலாக உணர்ந்தோம். உடனே தனி நேர்காணலாகவே அமையும் விதமாக மேலும் பல கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றோம். தன் நெஞ்சிலும் நினைவிலும் சென்னை மாநகரத்தைச் சுமந்துகொண்டிருக்கும் அவருக்கு பெங்களூர்வாசம் ஒரு பெரிய சுமையாக இருப்பதை எங்களால் புரிந்துகொள்ளமுடிந்தது. சென்னையைப்பற்றி பேசத்தொடங்கினாலே அவர் முகத்தில் படரும் புன்னகையும் வெளிச்சமும் அவருடைய நேசத்தை உணர்த்தும் சான்றுகள். எழுபது வயதைக் கடந்த அவருக்கு, அவருடைய சென்னை நினைவுகளே அருந்துணையாக உள்ளன. இந்த நேர்காணலை 2017 ஆம் ஆண்டு நானும் நண்பர் திருஞானசம்பந்தமும் அவருடைய வீட்டில் உரையாடி பதிவு செய்தோம். அந்த நேர்காணல் தீராநதி இதழில் வெளியானது. தற்செயலாக என் சேமிப்பில் வேறு ஒரு கட்டுரையைத் தேடிக்கொண்டிருக்கும்போது, இந்தப் பதிவைக் கண்டுபிடித்தேன். நண்பர்கள் வாசிப்புக்காக இங்கு மீள்பதிவு செய்துவைக்கிறேன்.

Monday 17 August 2020

மரணம் - சிறுகதை

 சுடுகாட்டைச் சுற்றி ஓடிப் பழகுவதுதான் என் அதிகாலைப்

பயிற்சியாக இருந்தது. சுடுகாடு தவிர வேறு விஸ்தாரமான

இடம் எதுவுமே இல்லாத ஊர் அது. எனக்கோ ஓட்டப்பயிற்சி

மேல் அளவுகடந்த மோகம். கட்டுக்கட்டாகத் திரண்டிருக்கும்

உடல்களைக் கொண்ட விளம்பரங்கள் என்னைக் கூவி அழைத்த

நாள்கள் அவை. காலங்காத்தால சுடுகாட்டு மொகத்துலதான்

முழிக்ணுமா’” என்கிற அம்மாவின் வார்த்தைகளை அசட்டை

செகதேன். என் ஆராக்கியமான லட்சியத்தை அன்பின்

பிடிக்குள் தள்ளி நொறுக்க நினைக்கும் அவள் திட்டத்துக்குக்

கிஞ்சித்தும் இடம் தரவில்லை. இத்தனைக்கும் காலை

நேரங்களில் அவள்தான் என்னை எழுப்பிவந்தாள். வாசலில்

அவள் சாண நீர் தெளித்து முடிப்பதற்கும் நான் ஷுக்களை

மாட்டிக்கொண்டு இறங்குவதற்கும் சரியாக இருக்கும். அவள்

முகம் போகும் போக்கு அத்தனை சந்தோஷத்துக்குரியதாக

இருக்காது. ஆனாலும் கவனிக்காததுபோல புறப்பட்டு

விடுவேன். நெகிழத் தொடங்கும் முதல் தருணத்திலேயே என்

உயிர் லட்சியத்தை கைகழுவ வேண்டியிருக்கும் என்பது

தெரிந்திருந்தது.

பரிவு - சிறுகதை

 கரையில் ஏறி நின்றான் வீரன்.

ஆழங்கால் மதகில் சடேர்சடேர் என்று அலைகள் மோதின.

மதகின் பெருத்த கம்பிகள் அதிரஅதிர நுரைகள் சிரித்தன.

பெண்ணையாற்றில் பெருகிப் பொங்கிய வெள்ளம் ஆழங்காலில்

புகுந்து ஏரிக்குள் புரண்டது. ஈரம் மிதந்த காற்றின் விசிறலில்

குளிர் பெருகியது. கால் இருள் விலகிய அதிகாலையில்

கண்ணுக்கெட்டிய தூரம் தண்ணீர் புரண்டது. தாவித்தாவி ஓடும்

தண்ணீரின் பாய்ச்சல் மடங்கி நெளியும் அலையின் நுரைகள்.

சீரான இரைச்சலில் மனமிழந்து நின்றான் வீரன். அவன்

தோளில் வாகான பெரிய கோடாலி.

Wednesday 12 August 2020

வாசனை - சிறுகதை

 

சந்தனநிறச் சட்டை. தீபாவளிக்கு எடுத்தது. அலமாரியிலிருந்து எடுத்து வைக்கும்போதே பாச்சா உருண்டையின் மணம் எழுந்தது. மேல்சட்டைப் பையின் மேல்விளிம்பில் எம்ப்ராய்டர் வேலையால் உருவாக்கப்பட்ட ஆங்கில எஸ் எழுத்து மட்டும் அடர்பழுப்பு நிறத்தில் இருந்தது. அடர் பழுப்பு நிறப் பேண்ட்டுக்குப் பொருத்தமான சட்டை.

கனவு மலர்ந்தது - சிறுகதை


அண்ணேஎன்று சந்தோஷத்தில் கூவினேன். சட்டென நாற்காலியிலிருந்து எழுந்து மேசை டிராயரை மூடிவிட்டு, மேசைக்கெதிரில் வைக்கப்பட்டிருந்த நாலைந்து மூட்டைகளைத் தாண்டிக்கொண்டு படியிறங்கி ஓடி வாசலில் நின்றுகொண்டிருந்த வேலாயுதன் அண்ணனுக்குப் பக்கத்தில் நின்றேன்.  உள்ள வாங்கண்ணே, நம்ம கடைதாண்ணே. எப்பிடி இருக்கிங்க?”

சா.கந்தசாமி : வற்றாத சிந்தனை நதி - அஞ்சலி

 

வாசகர் வட்டம் அறுபதுகளில் வெளியிட்ட நூல்களில் ஏராளமான பிரதிகள் எஞ்சியிருக்கின்றன என்றும் விருப்பப்பட்டவர்கள் வந்து வாங்கிச் செல்லலாம் என்றும் பிரசுரமாகியிருந்த ஓர் அறிவிப்பை ஒருமுறை பார்த்தேன். அந்த முகவரியை உடனடியாக என் குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொண்டேன். அப்போது  நான் கர்நாடகத்தில் ஹொஸ்பேட் என்னும் இடத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை ஊருக்கு வந்து செல்வேன். ஹொஸ்பேட்டிலிருந்து குண்டக்கல் வரைக்கும் ஒரு ரயில்பயணம். பிறகு குண்டக்கல்லிலிருந்து சென்னை வரைக்கும் மற்றொரு ரயில் பயணம். சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்துப்பயணம். போக ஒரு நாள், திரும்பி வர ஒரு நாள் பயணத்திலேயே கழிந்துவிடும்.