Home

Sunday 25 February 2024

சுஜாதா - நம்பமுடியாத விசித்திரம்

 

சுஜாதா என்கிற பெயரை நான் முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்த விடுமுறையில்தான் அறிந்துகொண்டேன். நாற்பத்தைந்து-நாற்பத்தாறு ஆண்டுகளுக்குமுன்பு என்பதெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது.

கோட்டை - சிறுகதை

 


கோட்டையில் பதவிப் பிரமாணவிழாவாம். தொழிலாளர்களின் கோரிக்கையை மதித்து பகல் பொழுது வேலையை ரத்து செய்திருந்தது கம்பெனி.

மதியச்சாப்பாட்டை வேண்டுமென்றே இரண்டு மைல் தள்ளி இருக்கிற ஓட்டலுக்கு நடந்துபோய் முடித்தேன். உச்சிப்பொழுதில் கூட குளுகுளுவென்று காற்றடிக்கிற நகரம் இது. மனசில் பொங்கும் எரிச்சல் தணியத்தணிய வீசுகிற காற்றை என்ன செய்வது. எரிந்துகொண்டே இருக்கும் நெருப்புக்குப் பக்கத்தில் போய் உட்காரலாமா என்று தோன்றியது

Sunday 18 February 2024

மரங்களின் கதை

 ஹம்பி எக்ஸ்பிரஸில் பிரயாணம் செய்த போது சந்தித்த நபரின் முகம் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவர்தான் எனக்கு இக்கதையைச் சொன்னார். சுவாரஸ்யமாகவும், தெளிவான குரலிலும் அக்கதையை விவரித்தார் அவர். சதாகாலமும் என்னை அரிக்கும் குழப்பம் எதுவும் அவரிடம் இல்லை. மரங்களைப் பற்றித்தான் அவருக்கு எத்தனை ஞானம் எத்தனை அனுபவம். எத்தனை வருஷங்கள் பாடுபட்டுச் சேகரித்த அனுபவமோ, அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு முத்துக்குச் சமம். அவர் சொன்ன கதையின் பிரமிப்பு என்னைவிட்டுச் சற்றும் அகலவில்லை. முதன்முதலில் அந்தக் கதையை என் மனைவியிடம்தான் பிரஸ்தாபித்தேன். அவளோ சிரித்துவிட்டாள். நம்பிக்கையற்ற அவள் பார்வை என்னை நிலைகுலைய வைத்தது. அன்றைய தேதியில் நான் எங்கும் பிராயணமே செய்யவில்லை என்றும் யாரையும் சந்திக்கவே இல்லை என்றும் ஆணித்தரமாய்ச் சொன்னாள். அவள் சொன்ன பிறகு நம்பத்தான் வேண்டியிருந்தது. நீங்கள் வேண்டுமானால் சந்தேகிக்க இடமுண்டு என்ற வகையில் இதை எடுத்துக் கொள்ளலாம்.

என்னைத் தூண்டும் விசைகள்

 

காந்தியடிகள் எழுதிய முக்கியமான நூல்களில் ஒன்று இந்திய சுயராஜ்ஜியம். விடுதலை பெற்ற இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றி அவர் ஆழ்மனத்தில் தீட்டி வைத்த சித்திரத்தின் எழுத்து வடிவமே இந்தப் புத்தகம். முழுக்க முழுக்க கேள்வி பதில் அமைப்பில் எழுதப்பட்ட புத்தகம். அவரே ஒரு கேள்வியை முன்வைத்து, அதற்குரிய பதில்களையெல்லாம் தொகுத்து பதிலாக எழுதிச் செல்கிறார். ஏன் என்கிற கேள்வி இல்லாத கேள்வியே அந்நூலில் இல்லை. சுயாராஜ்ஜியம் ஏன் வேண்டும்? இந்தியா ஏன் அடிமைப்பட்டிருக்கிறது? ஆங்கிலேயர்கள் ஏன் வெளியேறவேண்டும்? ஏன், ஏன் என இப்படி ஏராளமான கேள்விகளை எழுப்பி, ஒவ்வொன்றுக்கும் விரிவான பதிலை எழுதியிருக்கிறார்.

Sunday 11 February 2024

கல்லை மலராக்கும் கவிதைகள்

  

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்க்கவிதை மெல்ல மெல்ல நுண்சித்தரிப்புகளின் களமாக மாறி வந்திருக்கிறது. சரியான கோணத்திலும் போதுமான வெளிச்சத்திலும் எடுக்கப்பட்ட அழகானதொரு புகைப்படத்தைப் போல தேர்ந்தெடுத்த காட்சிகளை எழுதுவதில் கவிஞர்களுக்கு ஒரு தேர்ச்சி கைகூடி வந்திருக்கிறது. சில கவிதைகள் அக்காட்சிகளை ஒரு படிமமாக மாற்றி வாசிப்பவர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதியவைக்கின்றன. அல்லது குறிப்பிட்ட காட்சிக்கு இணையான காட்சிகளை தன் சொந்த வாழ்வில் நிகழ்ந்த பல தருணங்களிலிருந்து  கண்டடைவதற்குத் தூண்டுகோலாக இருந்து மகிழ்ச்சியடைய வைக்கின்றன. அப்போதெல்லாம் கவிதைக்கு நெருக்கமாக நாம் இருப்பதைப்பற்றி அல்லது நமக்கு நெருக்கமாக கவிதை இருப்பதைப்பற்றி நம் ஆழ்மனம் ஆனந்தமாக உணர்கிறது.

பொதுப்பார்வைக்கு வராத புதிய தகவல்கள்

  

சிற்றிலக்கியப் புலவரொருவர் ஒருமுறை  செவ்வூர் என்னும் ஊருக்குச் சென்றார். நெடுந்தொலைவு நடந்தே வந்ததால் அவருக்கு பசிக்கத் தொடங்கிவிட்டது. பெருமூச்சுடன் ஒரு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். அந்த வீட்டில் ஏராளமானவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் திண்ணையின் பக்கம் திரும்பி அவரைப் பார்த்தபடி சென்றார்களே தவிர, ஒருவர் கூட அவருக்குப் பக்கத்தில் வந்து விசாரிக்கவில்லை. ஒரு வாய்வார்த்தையாகக்கூட சாப்பிடுகிறீர்களா என்று ஒருவரும் கேட்கவில்லை. அச்சூழலைக் கண்டு மிகவும் மனம் புண்பட்ட புலவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடியே எரிச்சலில் ஒரு வெண்பாவைப் பாடினார்.

Sunday 4 February 2024

ஒரே ஒரு சிறுகதை

  

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தைப்பற்றி அம்ஷன்குமார் ஓர் ஆவணப்படத்தை எடுத்து முடித்திருப்பதாகவும் அந்தப் படம் புதுக்கோட்டையில் ஒரு திரையரங்கத்தில் வெளியிட இருப்பதாகவும் தினமணி இதழில் ஒரு செய்தியைப் படித்தேன். ‘இந்த வாரம் கலாரசிகன்’ என்னும் பகுதியில் தினமணியின் ஆசிரியரே அக்குறிப்பை எழுதியிருந்தார். ஒருநாள் விட்டல்ராவுடன் உரையாடும்போது அந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டேன். அம்ஷன்குமார் எடுத்திருக்கும் பிற ஆவணப்படங்களைப்பற்றியதாகவும் அந்த உரையாடல் தொடர்ந்தது.

சோமயாஜுலு : அஞ்சாத நெஞ்சும் வற்றாத அன்பும்

 

1919இல் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம், மூன்றாண்டு கால இடைவெளியிலேயே நாடெங்கும் வெற்றிகரமாகப் பரவி மக்கள் அனைவரையும் ஈர்க்கத் தொடங்கியது. அத்தகு சூழலில் உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் அருகில் செளரி செளரா என்னும் இடத்தில் 05.02.1922 அன்று  நடைபெற்ற ஊர்வலத்தில் எதிர்பாராத விதமாக வன்முறை ஏற்பட்டது. காவல்துறை தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதனால் அகிம்சைவழிப் போராட்டம் வன்முறை வழியில் திசைமாறுவதை விரும்பாத காந்தியடிகள் உடனடியாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துவதாக அறிவித்தார்.