Home

Sunday 26 May 2019

வெள்ளைக்காரன் - சிறுகதை



ன்னல் வழியாகத் தெரிந்த பெயர்ப்பலகையைக் காட்டி பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜிப்பாக்காரரிடம்என்ன ஊர் இது?” என்பதுபோல சைகையால் கேட்டான் அவன். ஒருகணம் அவனைத் திரும்பிப் பார்த்த  ஜிப்பாக்காரர் கையிலிருந்த சூடான தேநீரை அருந்தியபடிஜபல்பூர்ஜபல்பூர்என்று ஒன்றுக்கு இரண்டு தடவையாக பதில் சொன்னார். அதைக் கேட்டு அவனும்ஜபல்பூர்என்று முணுமுணுத்தபடி தலையசைத்துக்கொண்டான்.

தீப்பொறியின் கனவு - புத்தக அறிமுகம்




சமயம் தவிர்த்த விஞ்ஞானம் முடமானது, விஞ்ஞானம் தவிர்த்த சமயம் பார்வையற்றதுஎன்ற ஐன்ஸ்டீனின் பொன்மொழியுடன் தொடங்குகிறது மணி பெளமிக் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம். தன்வரலாற்றுத் தகவல்களும் அறிவியல் தகவல்களும் ஆன்மிகம் சார்ந்த தகவல்களும் நூல்முழுக்க மாறிமாறி இடம்பெற்று வாசிப்பை சுவாரசியமாக்குகின்றன. மணி பெளமிக்கின் மொழி மிகவும் நேரடியானதாகவும் எளிமையானதாகவும் உள்ளது. புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான இயற்பியல் கொள்கைகளையும் தத்துவத் தகவல்களையும் பொருத்தமான எடுத்துக்காட்டுகளோடு அழகாக முன்வைக்கிறார் அவர்