Home

Showing posts with label ஆண்டான் கவிராயர். Show all posts
Showing posts with label ஆண்டான் கவிராயர். Show all posts

Sunday, 13 October 2024

ஒரு கவிராயரின் விசித்திர வரலாறு

 

உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய என் சரித்திரம் புத்தகத்தில் பல ஊர்ப் பிரயாணங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது. ஓலைச்சுவடிகளுக்காகத் தேடியலைந்தபோது சென்றுவந்த சில ஊர்களைப்பற்றி உ.வே.சா. அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில். ஆறுமுகமங்கலம் என்னும் ஊருக்குச் சென்றுவந்த அனுபவப்பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அது எந்த விதத்திலும் சுவடிகளோடு தொடர்புடையதல்ல. அது அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கவிராயரைப்பற்றிய குறிப்பு. அவர் பெயர் ஆண்டான் கவிராயர்.