Home

Showing posts with label உயிர்க்கோடுகள். Show all posts
Showing posts with label உயிர்க்கோடுகள். Show all posts

Wednesday, 4 December 2024

திசைகளைநோக்கி விரிவடையும் கோடுகள்

  

எண்பதுகளின் இறுதியில் ஜூனியர் விகடன் வார இதழில் கி.ராஜநாராயணன் “கரிசல் காட்டுக் கடுதாசி” என்னும் தலைப்பில் ஒரு தொடரை எழுதினார். அத்தொடரில் செவிவழிச் செய்தியாக அறிந்தவர்கள் என்றும் நேரில் பார்த்துப் பழகியவர்கள் என்றும் பலவிதமான மனிதர்களையும் சில அபூர்வமான வாழ்க்கைத் தருணங்களையும் அழகான சொற்சித்திரங்களாகத் தீட்டினார். வாசகர்களின் நெஞ்சில் இன்றும் நிலைத்திருப்பவை அச்சித்திரங்கள். அந்த எழுத்துச் சித்திரங்களுக்கு உய்¢ரூட்டும்வகையில் எளிமையும் அழகும் மிளிரும் கோட்டுச் சித்திரங்களை ஒவ்வொரு வாரமும் அத்தொடருக்காக வரைந்தளித்தவர் ஆதிமூலம். எழுபதுகளின் சிற்றிதழ்களின் வழியாகவும் சிறிய பதிப்பகங்களின் முகப்போவியங்கள் வழியாகவும் இலக்கிய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் கி.ரா.வின் எழுத்துலகத்துக்கு கூடுதல் பரிமாணத்தை வழங்கின. நல்ல எழுத்துகளும் நல்ல சித்திரங்களும் இணைந்து சிந்தனைக்கு ஊக்கமளித்தன.