Home

Showing posts with label எட்டு மாம்பழங்கள். பாரதி புத்தகாலயம். Show all posts
Showing posts with label எட்டு மாம்பழங்கள். பாரதி புத்தகாலயம். Show all posts

Tuesday, 19 December 2017

எட்டு மாம்பழங்கள் - புதிய சிறுவர் பாடல் தொகுதி முன்னுரை






ஹூப்ளி என்னும் ஊருக்குப் பக்கத்தில் பத்து நாட்கள் தொடர்ச்சியாக தங்கி வேலை பார்க்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஊர் தொலைபேசி நிலையத்திலேயே ஓர் அறையில் தங்கியிருந்தேன். வேலையிடத்துக்கு என்னை அழைத்துச் செல்லவேண்டிய நண்பர் தன் சொந்த வீட்டிலிருந்து கிளம்பி வந்து என்னை அழைத்துச் செல்வார். அவருடைய சிரமத்தைக் குறைப்பதற்காகவும் பயணத்தொலைவைக் குறைப்பதற்காகவும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு பொது இடத்தை, இருவரும் சந்தித்துப் புறப்படும் இடமாக அமைத்துக்கொண்டோம்.