Home

Showing posts with label எழுத்தாளர் விண்மீன். Show all posts
Showing posts with label எழுத்தாளர் விண்மீன். Show all posts

Tuesday, 21 September 2021

புன்னகை பூக்க வைக்கும் வரிகள்

 

கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் நவீன கல்வியின் அறிமுகத்துக்குப் பிறகு குழந்தைகளுக்கான பாடல்களுக்கும் கதைகளுக்கும் ஓர் அவசியத்தேவை உருவானது. அதையொட்டி குழந்தைகளுக்கென எழுதும் பல கவிஞர்களும்  கதையாசிரியர்களும் உருவாயினர். ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் ஆங்கிலவழிக் கல்வி எங்கெங்கும் வேரூன்றி தழைத்துப் பெருகத் தொடங்கியதும், அந்தத் தேவை மெல்ல மெல்ல குறைந்து இல்லாமலானது.