Home

Showing posts with label ஏழு அதிசயங்கள். Show all posts
Showing posts with label ஏழு அதிசயங்கள். Show all posts

Sunday, 20 May 2018

ஏழு அதிசயங்கள்- கட்டுரை



     காட்சி ஊடகத் தொடர்பியலைப் பாடமாக நடத்தும் ஆசிரியர் ஒருவருக்கும் எனக்கும் நெருக்கமான தொடர்புண்டு. கிட்டத்தட்ட பத்தாண்டு காலப் பழக்கம். உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறவர். மரங்கள், பறவைகள்பற்றி ஏராளமான பல தகவல்களைத் துல்லியமாக ஞாபகத்தில் வைத்திருப்பவர். ஒருமுறை மாலைநடை வேளையில் ஏறத்தாழ அறுபது பறவைகளின் பெயர்களையும் அவற்றின் வடிவமைப்பையும் குரலமைப்பையும் அவர் சொன்னதை மனம் சிலிர்க்கக் கேட்டுக்கொண்டிருந்த அனுபவம் என் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம்.  வாட்டம் என்பதே என்னவென்று அறியாதவை அவருடைய பேச்சும் குரலும். பத்து நிமிடம் அவரோடு பேசிக்கொண்டிருந்தால் போதும், பத்து நாட்களுக்குத் தேவையான ஊக்கம் தானாகவே அவரிடமிருந்து நம்மைத் தொற்றிக்கொள்ளும்.