கடந்த
பத்தாண்டுகளில்
சொல்வனம், திண்ணை, பதாகை போன்ற இணைய இதழ்களில் அவ்வப்போது சிறுகதைகளை எழுதி வருபவர் ரா.கிரிதரன். மிகக்குறைவாவே அவர் எழுதி வந்தாலும் அவர் படைப்புகள் நம்பிக்கையூட்டும் விதமாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். படைப்பாக்கம்
சார்ந்து அவரிடம் வெளிப்படும் அக்கறையின் மீது எனக்கு எப்போதும் மதிப்புண்டு. குறிப்பாக ஏராளமான நுண்தகவல்களை, எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு தெரியாதபடி மிக கச்சிதமாகவும் பயன்படுத்தும் கலை அவரிடம் தென்படுவதை உணர்ந்தேன். பத்தாண்டு கால கனவின் வெளிப்பாடாகவும் உழைப்பின் விளைவாகவும் வெளிவந்திருக்கும் ரா.கிரிதரனின் முதல் தொகுதி காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை.