காந்தியடிகளின் தலைமையில் இருவிதமான அறவழிப்போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று இந்திய விடுதலைப்போராட்டம். மற்றொன்று தேச நிர்மாணப்பணிகளை நிறைவேற்றுதல். இவ்விரு பாதைகளிலும் ஈடுபட்டு தியாக உணர்வுடன் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஆளுமைகள் பலர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் என்கிற மத வேறுபாடுகளைக் கருதாது நல்லிணக்கப்பார்வையுடன் நாட்டின் மேன்மை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு உழைத்தவர்கள் அவர்கள்.