Home

Showing posts with label சிட்டுர்க்குருவியின் வானம். Show all posts
Showing posts with label சிட்டுர்க்குருவியின் வானம். Show all posts

Thursday, 25 April 2019

கருணையின் ஊற்று - கட்டுரை


பயணங்களில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரிடம் உரையாடுவது என்பது ஒரு கலை. அதில் சாமிநாதன் தேர்ச்சி மிக்கவர். உரையாடுவதில் ஒருவருக்கு ஆர்வம் உண்டா இல்லையா என்பதை அவர் ஒரு பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவார். அதற்குப் பிறகுதான் பேச்சையே தொடங்குவார். பேசிப்பேசி அவர்களுடைய மனத்தில் இடம் பிடித்துவிடுவார்.