‘தமிழ்தான தம்பி நீங்க . . .’
‘ரொம்ப நல்லதா போச்சி. நாப்பத்தஞ்சி வருஷமா இந்த ஊர்ல இருக்கம். இன்னம் இந்த கன்னட பாஷ நாக்குல படியல. அடிவயித்லேந்து மூச்சுக் கட்டிப் பேச ரொம்ப சிரமம். அப்டி இப்டி கடகண்ணிக்கு போனா ரெண்டு வார்த்த பேசுவன். அவ்ளோதான் தெரியும். தொடச்சியா தமிழ் மாதிரி வராது. அதனாலயே எங்க போனாலும் தமிழ்ல பேச ஆரம்பிச்சிடுவன். ஆனா கன்னடத்தில யாரு பேசனாலும் பூரா புரிஞ்சுக்குவன்.’