Home

Showing posts with label திருச்செங்கோடு. Show all posts
Showing posts with label திருச்செங்கோடு. Show all posts

Sunday, 16 January 2022

க.சந்தானம் : நிறைமொழி மாந்தர்

 

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்  முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் உடல்நலம் குன்றி 01.08.1920 அன்று மறைந்தார். 12.08.1920 அன்று சென்னைக்கு வந்திருந்த காந்தியடிகள் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையில் திலகருக்கு அஞ்சலி செலுத்தி தன் உரையைத் தொடங்கினார். திலகரின் அர்ப்பணிப்புணர்வையும் தியாகத்தையும் பெரிதும் பாராட்டிப் பேசினார் காந்தியடிகள். திலகர் மூட்டிவிட்டுச் சென்ற சுதந்திரக்கனல் நாடெங்கும் பரவி வெற்றி கிட்டும் வகையில் இளைஞர்கள் எழுச்சியுடன் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தின் நோக்கத்தையும் எதிர்பார்ப்புகளையும் விரிவாக முன்வைத்தார்.

Sunday, 25 July 2021

காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் : தன்னடக்கத்தின் சிகரம்

         கதராடைகளை அணியவேண்டிய தேவையைப்பற்றி மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காகவும் கதர்ப்பணிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டவும் 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் நாடு தழுவிய ஒரு நெடும்பயணத்தை மேற்கொண்டார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்டு பீகார், மத்தியப்பிரதேசம் முழுதும் மூன்றுமாத காலம் பயணம் செய்து மக்களைச் சந்தித்தார். பிறகு பம்பாய் வழியாக கர்நாடகத்துக்கு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நிலை குன்றியது. ஏறத்தாழ நான்கு மாத காலம் அவர் கர்நாடகத்திலேயே தங்கியிருக்கவேண்டியிருந்தது.