'வழிமயக்கம்'
என்ற தலைப்பில் பாலகுமாரன் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அடுக்கப்பட்ட வாழைத்தார்களோடு
சாலைவழியாக வண்டியை இழுத்துக்கொண்டு செல்வார் ஒரு வண்டிக்காரர். அதே சாலையில் ஓரமாக
வேறொருவர் நடந்து செல்வார். அவருக்கும் வண்டிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இருவருமே
வெவ்வேறு நோக்கங்களோடு தனித்தனியாகச் செல்கிறவர்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதுகூட
இல்லை. எதிர்பாராதவிதமாக சந்திக்கிற நண்பரொருவர்
பார்வையில் வாழைத்தார்களை வாங்கி வண்டியிலேற்றிவிட்டு கூடவே இவரும் நடந்துசெல்வதுபோலத்
தோன்றுகிறது. என்ன விலைக்கு வாங்கினீர்கள்,
எங்கே வாங்கினீர்கள் என்றெல்லாம் கேட்கத் தொடங்குகிறார். நடந்துசெல்லும் நண்பர் குழப்பமும் கூச்சமுமடைகிறார்.
அது தன்னுடையதில்லை என்று சொல்கிறார்.