Home

Showing posts with label நேற்று வாழ்ந்தவர்கள். Show all posts
Showing posts with label நேற்று வாழ்ந்தவர்கள். Show all posts

Sunday, 5 July 2026

வழி - சிறுகதை

 

வனாந்திரமான இடத்தில் பெரியபெரிய புகை போக்கிகள் முளைத்த கல் கட்டிடத்தின் கம்பீரம் தெருவில் போகும் யாரையும் திரும்ப வைத்துவிடும். இதே பாதையில் வேலை சம்பந்தமாய் நான் அலைய ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். என் வேலைக்கென்றே இலாக்கா மோட்டார் சைக்கிள் ஒன்று என் வசமிருந்தது

Sunday, 17 May 2026

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி 1

  

குளிப்பாட்டி முடித்ததும் குதிரையைத் தட்டி அழைத்துக்கொண்டு கரையேறினான் பார்த்தசாரதி.

பார்த்தசாரதிக்கு முன்னால் இருள் பிரியாத ஆகாயம் விரிந்து கிடந்தது. தூரத்தில் கறுப்புச்சித்திரம் மாதிரி ஆலமரங்களும் ரயில்வே ஸ்டேஷனும். ஏரிக்கரையில் இருந்து பஞ்சாயத்து போர்டு தெருவுக்குள் இறங்கும் ஒற்றையடிப்பாதைகூட எழுதி அழித்த மங்கலான கோடு மாதிரி தெரிந்தது. கால் இருளில் பால்மாதிரி ஒரு வர்ணத்தில் குதிரையுடன் பார்த்தசாரதி நடப்பது புராணகாலத்து ராஜகுமாரன் நடப்பதுபோல இருந்தது.

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி - 2

 

( தொடர்ச்சி.......)

நீ சொல்ற வெலயல்லாம் கேட்டப்பறம் இனிமே அதான் செய்யணும்.”

யோவ், எதுக்குய்யா வளவளன்னு பேசிக்னு. சீக்கிரமா ஒரு வெலயச் சொல்லி எடுத்துக்கினு போயா.”

யேன் போவலன்னா போலீஸ்ல சொல்லிருவியா?”

Tuesday, 9 January 2024

வேஷம் - சிறுகதை

வாசலில் நிழலாடியதை கணிப்பொறியின் திரை உணர்த்திவிட்டது. முதலாளி. திரும்பவில்லை நான். வேலையில் மனம் குவித்திருந்தேன். அடிக்கடி வந்து அவருக்குள்ளிருக்கும் பயயத்தை எனக்கும் தொற்றவைத்தபடி இருந்தார். பதட்டங்களாலேயே தவறுகள் கூடின. திருத்தங்களுக்கு மேலும் சில மணி நேரங்கள் தேவைப்பட்டன. இன்னும் அவர் அங்கேயே நின்றிருப்பதை உணர்ந்தேன். மரியாதையின் நிமித்தம் திரும்பி அவர் பக்கம் புன்னகை சிந்தினேன். சட்டென அவர் என்னை நெருங்கிவிட்டார். அமைதி குலைந்திருந்தன அவர் கண்கள். குளிர் அறையிலும் முகமெங்கும் வேர்வையின் பெருக்கு.

Sunday, 24 July 2022

மரணம் - சிறுகதை

 

 சுடுகாட்டைச் சுற்றி ஓடிப் பழகுவதுதான் என் அதிகாலைப் பயிற்சியாய் இருந்தது. சுடுகாடு தவிர வேறு விஸ்தாரமான இடம் எதுவுமே இல்லாத ஊர் அது. எனக்கோ ஓட்டப்பயிற்சி மேல் அளவுகடந்த மோகம். கட்டுக்கட்டாய்த் திரண்டிருக்கும் உடல்களைக் கொண்ட விளம்பரங்கள் என்னைக் கூவி அழைத்த நாள்கள் அவை. “காலங்காத்தால சுடுகாட்டு மொகத்துலதான் முழிக்கணுமாஎன்கிற அம்மாவின் வார்த்தைகளை அசட்டை செய்தேன். என் ஆரோக்கியமான லட்சியத்தை அன்பின் பிடிக்குள் தள்ளி நொறுக்க நினைக்கும் அவள் திட்டத்துக்குக் கிஞ்சித்தும் இடம் தரவில்லை. இத்தனைக்கும் காலை நேரங்களில் அவள்தான் என்னை எழுப்பிவந்தாள். வாசலில் அவள் சாண நீர் தெளித்து முடிப்பதற்கும் நான் ஷுக்களை மாட்டிக்கொண்டு இறங்குவதற்கும் சரியாய் இருக்கும். அவள் முகம் போகும் போக்கு அத்தனை சந்தோஷத்துக்குரியதாய் இருக்காது. ஆனாலும் கவனிக்காததுபோல புறப்பட்டு விடுவேன். நெகிழத் தொடங்கும் முதல் தருணத்திலேயே என் உயிர் லட்சியத்தை கைகழுவ வேண்டியிருக்கும் என்பது தெரிந்திருந்தது.