Home

Showing posts with label புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025. Show all posts
Showing posts with label புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025. Show all posts

Sunday, 24 August 2025

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025 : நிறைவும் நெகிழ்ச்சியும்

 

கன்னட இலக்கியச் செயல்பாடுகளை இணையம் வழியாக உலக அளவில் விரிவாகக் கொண்டுசெல்லும் நோக்கத்தோடு 2021இல் புக் பிரம்மா டிரஸ்ட் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் நாவலாசிரியரும் ஊடகவியலாளருமான சதீஷ் சப்பரிக்கெ. கடந்த நான்கு ஆண்டுகளாக புக் பிரம்மா ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக பல புத்தக வெளியீடுகளையும் எழுத்தாளர்களின் நேர்காணல் நிகழ்ச்சிகளையும்  நடத்திவருகிறது.