Home

Showing posts with label பெயரென்னும் பெருமை. Show all posts
Showing posts with label பெயரென்னும் பெருமை. Show all posts

Sunday, 26 April 2026

வாசிப்பும் உரையாடலும்

 

ஜெயஸ்ரீ அவர்களை முதன்முதலாகக் கடலூரில் சந்தித்து உரையாடிய சிறிது நேரத்திலேயே அவர் தம் நெஞ்சில் தேக்கிவைத்திருந்த இலக்கிய ஈடுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்று தமக்குப் பிடித்த சிறுகதைகளாக அவர் படித்திருந்த சில மூத்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை நினைவிலிருந்து அடுக்கிக்கொண்டே சென்றது இன்னும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.