Home

Showing posts with label முகம் அழிந்த கால. Show all posts
Showing posts with label முகம் அழிந்த கால. Show all posts

Friday, 10 January 2025

புன்னகை பூத்த முகம்: கவிஞர் உமாமோகன் அஞ்சலி

  

பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில்தான் கவிஞர் உமா மோகனை முதன்முதலாகச் சந்தித்தேன். அன்று  மாலையிலேயே கண்காட்சிக்கு வந்துவிட்ட நான் ஒரு சுற்று எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கிவிட்டு இரண்டாவது சுற்றில் சந்தியா பதிப்பகத்துக்கு வந்து சேர்ந்தேன். அப்போது உமா மோகனையும் வண்ணதாசனையும் அங்கு நின்றிருந்தனர். வண்ணதாசன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். உமா மோகன் புன்னகைத்தபடியே “என்ன சார் நீங்க? எங்க ஊருக்காரர எனக்கு அறிமுகப்படுத்திறீங்களா? அவரைப் பார்த்ததில்லையே தவிர, நிறைய படிச்சிருக்கேன்” என்று கூறினார். “அப்படியா, சரி சரி” என்று சிரித்துக்கொண்டார் வண்ணதாசன்.