Home

Showing posts with label முனைவர் முத்துஇலக்குமி. Show all posts
Showing posts with label முனைவர் முத்துஇலக்குமி. Show all posts

Sunday, 1 June 2025

என்றென்றும் வாழும் இலட்சியவாதம்

  

சர்வோதயம் மலர்கிறது இதழின் ஆசிரியராகவும் மதுரை காந்தி நினைவகத்தின் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிய க.மு.நடராஜன் அண்ணாச்சி 24.05.2021 அன்று இயற்கையெய்தினார். நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்பதை நம்பவே முடியவில்லை. இன்றும் நண்பர்களோடு உரையாடும் சமயத்தில் அவர் தொடர்பான சில செய்திகளும் அடிக்கடி இடம்பெற்று வருவதால், அவருடைய மறைவு மனத்தில் பதியவே இல்லை.