மு.நடேசன் எழுத்தாளரல்ல. நெய்வேலி சுரங்கத்தில் அறுபதுகளில் அளவையாளராக இணைந்து படிப்படியாக பொறியாளராக உயர்ந்து 1994இல்பணிநிறைவு செய்த ஓர் எளிய குடும்பஸ்தர். அவர் மேச்சேரிக்கு அருகில் காடம்பட்டியானூர் என்னும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பை முடித்தார். வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஓர் எழுத்தராக வேலை கிடைத்தபோதும், மேற்படிப்பு படிக்கும் ஆவலால் கோவை தொழில்நுட்பக்கல்லூரியில் சுரங்கவியல் படித்து நெய்வேலியை அடைந்தார். அதற்குப் பிறகு அவர் நெய்வேலியை விட்டுச் செல்லவில்லை. அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன.