Home

Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

Sunday, 27 February 2022

கவிதை என்னும் கலை

  

     கவிதையுலகில் புறவுலகக் காட்சிகளைச் சித்தரிப்பது என்பது அழகான கலை. நம்மைச் சுற்றி நிறைந்திருக்கிற செடிகள், கொடிகள், மரங்கள், பாலங்கள், ஆறுகள் என எந்தப் புள்ளியிலிருந்தும் ஒரு கவிதையைத் தொடங்கலாம். அது ஒரு படைப்பாளியின் தேர்வு. ஆனால் அந்தப் புள்ளியை அவன்  கவிதைக்குள் முன்வைக்கும்போது, அந்தத் தேர்வு எந்த அளவுக்குச் சரியானது என்பதை நிறுவியிருக்கவேண்டும். அது மிகமிக முக்கியம்.

Thursday, 13 July 2017

ஆனந்தமும் அமைதியின்மையும்- ஆத்மாநாமின் "இன்னும்"


"ஆகாயப் பறவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை" என்றொரு வாசகத்தை உணவுமேசைக்கு அருகே எழுதிவைத்திருந்தார் நண்பர். உள்ளே நுழைந்ததுமே அது என் பார்வையில் பட்டுவிட்டதுஉரையாடிக்கொண்டிருக்கும்போது என்னையறியாமல் என் பார்வை அதன்மீது பட்டுப்பட்டுத் திரும்பியதுஏதோ ஒரு கணத்தில் உரையாடலும் அந்தத் திசையில் திரும்பிவிட்டது. "பறவைகளின் மகிழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா?" என்று கேட்டார் நண்பர்.  "ஏன் நாம் மகிழ்ச்சியாக இல்லையா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டேன் நான்.  "இன்றைய தேதியில் மகிழ்ச்சிக்கு வாழ்வில் எங்கே இடமிருக்கிறது, சொல்லுங்கள்? ஏதோ ஒன்று எப்போதும் தேவைப்பட்டபடி இருக்கிறது. அந்தத் தேவையை நிறைவேற்ற ஓடுகிறதுதேவைப்பட்டது கிடைக்கும்போது தேவையின் அளவும் பெருகிவிடுகிறதுகிடைக்காதபோதோ, அது ஒரு பெரிய மனபாரமாக மாறிவிடுகிறது" என்று சொல்லி பெருமூச்சு வாங்கினார்.